tamilnadu

img

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டின் 2 ஆவது நாள்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில  துணைத் தலைவர்கள் எஸ்.காந்திமதி நாதன், வெ.சண்முகசுந்தரம், ஜெ.பாஸ்கர் பாபு, அ.சௌந்தரபாண்டியன், மாநிலச்  செயலாளர்கள் ந.ஜெய்சங்கர். எஸ்.ராஜ சேகர், என்.புகழேந்தி, வே.செந்தில்குமார், தணிக்கையாளர் கே.சரவணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.  28 மாவட்டங்களுக்கும், புதிய நிர்வாகி கள் தேர்வு தேர்தல் மூலம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.  புதிய நிர்வாகிகள் தேர்வு அதில் மாநிலத் தலைவராக எஸ். காந்திமதிநாதன், மாநில பொதுச் செயலாள ராக க.பிரபு, மாநில பொருளாளராக மா.விஜய பாஸ்கர், மாநிலத் துணைத் தலைவர் களாக ந.திருவேரங்கன், அ.சௌந்தர பாண்டியன், மு.வீரகடம்பகோபு, கி.சோம சுந்தர், கே.சரவணன்,வளர்மாலா, ச.இளங் குமரன், மாநிலச் செயலாளர்களாக அ.பாலாஜி, வி.முத்துசுந்தரம், த.கொளஞ்சிவேலு, செந்தில் குமார், கே.எஸ்.செந்தில்குமார், எம்.கே.ஷேக்  தாவூத்,ஆர்.பழனி, தணிக்கையாளர் களாக அ.அன்புச்செல்வன், சு.தாமோதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பொது  மாநாட்டில், முன்னாள் மாநில பொதுச் செய லாளர் தோழர் பாரி புதிய நிர்வாகிகளை அறி முகப்படுத்தி கோரிக்கை விளக்க உரை யாற்றினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கே.பாலபாரதி சிறப்புரை ஆற்றினார். மாநில  பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றியுரை ஆற்றினர்.