திருவனந்தபுரம், டிச. 9- இரண்டாவது முறை பினராயி அரசு ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் நிறைவ டைந்த நிலையில், கேர ளாவில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் போராட்டம், மக்களின் அரசியல் மனப் பான்மை எல்டிஎப்-க்கு சாதகமாகத்தான் உள்ளது என்பதை மீண்டும் நிரூ பித்தது. 32 உள்ளாட்சி வார்டு களில் தீர்ப்பு அரசியல் தாக்கம் கொண்டது. மாவட்ட, ஒன்றிய பஞ்சா யத்து வார்டுகள் மற்றும் நகராட்சிகளில் எல்டிஎப் வெற்றி பெற்றிருப்பது எதிர்க் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக விவாதங்களை எழுப்பி அரசின்மீது குற்றம் சாட்டியவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம் மாநக ராட்சிக்கு எதிராக யுடிஎப் பும் பாஜகவும் இணைந்து நடத்திய போராட்டம் வெட்டு காடு வார்டு இடைத்தேர்த லை குறிவைத்துதான். சில அதிகாரிகள் நடத்திய வரி ஏய்ப்பை, மாநகராட்சியின் தலையில் சுமத்தி அதன் செயல்பாட்டையே சீர் குலைக்கும் முயற்சியாகும் அது. எனினும் வெட்டுக்காடு வார்டில் மக்கள் அளித்த தீர்ப்பு முன்பை விட அதிக பெரும்பான்மைக்கு உதவி யுள்ளது. மாவட்ட பஞ்சா யத்துகளின் மூன்று டிவிசன்க ளிலும் எல்டிஎப் வாக்கு வித்தி யாசத்தை அதிகரித்துள்ளது. நான்கு ஒன்றிய பஞ்சாயத்து வார்டுகள் மற்றும் இரண்டு மாநகராட்சி வார்டுகளை தக்க வைத்ததன் மூலம் விவாதங்களுக்கு மக்கள் பதிலளித்தனர். ஆறு மாதங்களுக்குள் விவாதங்களையும், பொய்க ளையும் பரப்பி அரசாங்கத் தின் நடவடிக்கைகளைத் தடுக்க எதிர்க்கட்சிகள் முயன்றன. இதற்கு பெரும் பாலான ஊடகங்கள் துணை நின்றன. இந்த தீர்ப்பு விவா தங்களை கிளப்பிய ஊட கங்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது. வளர்ச்சி க்கு எதிரான போக்கை மாற்றிக் கொள்ள எதிர்க்கட்சி கள் தயாரா என்று கேரளா இப்போது உற்று நோக்கு கிறது.