சென்னை,டிச.12- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கன மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சியளித்தன. தற்போது கூட சென்னையை சுற்றியு ள்ள பகுதிகளில் சில இடங்களில் தேங்கிய மழை வெள்ளம் முழுமையாக வெளியே ற்றப்படாத நிலை உள்ளது. மழை மற்றும் காற்றால் மின்சாரம், நெடுஞ்சாலை, நீர்வளத்துறைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மழை வெள்ள பாதிப்புகளை சீரமைக்க 14 துறைகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநக ராட்சிக்கு 132 கோடி ரூபாயும், நகராட்சி நிர்வாகத்திற்கு 62 கோடி ரூபாயும், நீர்வளத்துறைக்கு 20 கோடி ரூபாயும், நெடுஞ்சாலை துறைக்கு 17 கோடி ரூபாயும், மின்சாரத்துறைக்கு 15 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது.