சென்னை, அக்.19- ‘கத்துக்குட்டி’, ‘உடன் பிறப்பே’ போன்ற படங்களை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘நந்தன்’. இயக்கு நர்கள் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்தி ரங்களில் நடித்திருந்தனர். சாதி ரீதியாகப் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் வலிகளைப் பேசும் படங்களின் வரிசையில், இதுவரை பேசப்படாத சிக்கலைத் தீவிரமாகவும் ஆரவாரம் இல்லாமலும் - முக்கியமா கப் பிரச்சார தொனியின்றி அழுத்தமாக வும் ஆதாரங்களுடனும் ‘நந்தன்’ காட்சிப்படுத்தியிருந்தது. ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இந்நிலையில், ‘நந்தன்’ திரைப்பட இயக்குநர் இரா. சரவணன், திரைக் கலைஞர் சசிக்குமார் ஆகியோர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனை கட்சியின் மாநிலக்குழு அலுவல கத்தில் சந்தித்தனர். அப்போது, ‘நந்தன்’ திரைப்படம் மூலம் தலித் உள்ளாட்சித் தலைவர்கள் சந்திக்கும் சாதிய தீண்டாமைக் கொடு மைகளை வெளிக்கொண்டு வந்த தற்காக இயக்குநர் இரா. சரவணன், திரைக்கலைஞர் சசிக்குமார் ஆகி யோரை மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பாராட்டி வாழ்த்து தெரி வித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், கே. சாமு வேல்ராஜ், மாநிலக் குழு உறுப்பி னர்கள் ஆறுமுகநயினார், என். பத்ரி, வே.ராஜசேகரன், பா. ஜான்சி ராணி ஆகியோர் உடனிருந்தனர். ‘நந்தன்’ திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது குறிப் பிடத்தக்கது.