tamilnadu

மூடப்பட்டுள்ள என்டிசி - கூட்டுறவு பஞ்சாலைகளை மீண்டும் இயக்கக் கோரி மார்ச் 18-இல் போராட்டம்!

இராஜபாளையம், பிப்.21 -  தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள என்டிசி - கூட்டுறவு பஞ்சாலைகளை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச்  18 அன்று கோரிக்கை தினம் கடைப் பிடிக்கப்படும் என்று  சிஐடியு பஞ்சா லைத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் அறிவித்துள்ளது.  தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலா ளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம்.  சந்திரன் தலைமையில் இராஜபாளை யம் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் எம். அசோகன், பொருளாளர் எஸ். சக்தி வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்டிசி பஞ்சாலைகள் கடந்த  நான்கு ஆண்டுகளாக இயக்கப்படா மல் உள்ளன. இதனை நம்பியிருந்த  பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் கள் பாதிப்படைந்துள்ளனர். நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் காலம் கடந்து ஊதியம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

ஆலைகளை ஒன்றிய அரசு இயக்க வேண்டும். கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் 18- க்கும் மேற்பட்ட கூட்டுறவு பஞ்சாலை கள் இயங்கி வந்தன. தற்பொழுது கன்னி யாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டும் கூட்டுறவு பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆதிராவிடர் மற்றும் பெண்கள் நலனுக்காக இராமநாதபுரம் கூட்டுறவு பஞ்சாலை இயங்கி வருகிறது. கூட்டுறவு பஞ்சா லைகளில் நிரந்தரம் என்று பணிபுரிந்து  வருபவர்கள் 320 பேர் மட்டுமே.  1500-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.  தொழிலாளர் துறை அதிகாரிகள் பிறப்பிக்கும் பணி நிரந்த ரம் குறித்த உத்தரவுகளும் அமலாக்கப் படாமல் தொழிலாளர் நலனுக்கு எதிராக  மேல்முறையீடுகள் செய்யப்படுகிறது. அண்ணா கூட்டுறவு நூற்பாலை யில் நிர்வாக மேல்முறையீடு உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 208 பேரின் பணி நிரந்தரம் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களை பணியில் நிரந்தரம் செய்ய வேண்டும். 

குறைந்தபட்சக் கூலியை உறுதி செய்க!

பஞ்சாலைகளில் தொழில்வாரி யான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த  காலங்களில் அமலாக்கப்பட்டு வந்தது.  கடந்த 23 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை. தொழில் தீர்ப்பா யத்தில் நடந்த வழக்கும் தீர்வு இல்லா மல் முடிக்கப்பட்டது. எனவே குறைந்த பட்ச கூலியை நிர்ணயம் செய்ய குழுவை அமைத்து பஞ்சாலைத் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி  கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஆணை யம் ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச பென்சன் என்பதை உயர்த்த வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாதம் ரூ.3000 வழங்கலாம் என தீர்மா னிக்கப்பட்டும் இதுவரை வழங்காமல்  உள்ளது. ஒன்றிய அரசு வயதான வர்களின் சிரமங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு குறைந்தபட்ச பென் சனை உடனடியாக உயர்த்த ஆவன செய்ய வேண்டும்.


வருங்கால வைப்பு நிதிக்கு பிடித்தம்  செய்வது போல சம்பளம் அதிகம் பெற்றாலும் ரூ.21000-க்கு இஎஸ்ஐ திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களை நிறை வேற்ற தமிழக அரசு, தொழிலாளர் துறை, ஆலை நிர்வாகங்கள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி மார்ச் 18 அன்று கோரிக்கை தினம் கடைப்பிடிக்கவும், மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட மையங்களில் பிரச் சாரம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ளது.