சென்னை, செப். 15- துறைமுகம் தனியார்மயமா னால் போதைப் பொருள் கடத்தல் அதிகரிக்கும் என ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். துறைமுகங்களில் காலியாக உள்ள 30 ஆயிரம் காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் வியாழனன்று (செப். 15) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை துறைமுகம் வாயில் அருகே சென்னை போர்ட் அண்டு டாக் எம்ப்ளாயிஸ் யூனியன் (சிஐடியு) பொதுச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நீர்வழி போக்குவரத்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் என்.வி.ராஜேந்திரன் (எச்.எம்.எஸ்.) ஏ.பலராமன் (ஐஎன்டியுசி), டி.நரேந்திரராவ், தமிழ்செல்வன், ராஜேந்திரன் (சிஐடியு) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
பணமயமாக்கும் திட்டத்தின் கீழ் துறைமுகங்களுக்குள் சரக்கு கையாளும் முனையங்களை தனி யாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் யார் வேண்டு மானாலும் உள்ளே வந்து போக முடியும் என்ற நிலை உருவாகும். இந்தியாவில் 9 கடல்சார் மாநிலங்கள் உள்ளன. இந்தியாவின் அரணாக இருக்கக் கூடிய கடல்சார் துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைத்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். கொச்சி, கோவா, விசாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் கப்பற் படை தளங்கள் உள்ளன. இந்த துறைமுகங்களை தனியார்மயமாக் கினால் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். அரசுக்கு சொந்தமான 12 துறை முகங்களில் 4 துறைமுகங்கள் அதானி போன்ற தனியாரின் ஆதிக் கத்தில் உள்ளது. குஜராத்தில் அதானிக்கு சொந்தமான முந்ரா துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. சுங்க இலாகா அதிகாரிகள் இல்லை. துறைமுகங் கள் தனியார்மயமானால் நாடு முழுவதும் கள்ளக்கடத்தலும், போதை பொருட்கள் கடத்தலும் சர்வ சாதாரணமாக மாறிவிடும். அத்து டன் தீவிரவாதிகளின் ஊடுருவலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. துறைமுக மருத்துவமனை, தீ அணைப்பு நிலையம் போன்ற வற்றிலும் புதிதாக ஊழியர் நியமனம் செய்யாமல், தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக் கிறார்கள்.
மருத்துவமனை தனியார்மயமா னால் ஓய்வு பெற்றவர்கள் பணம் கொடுத்தால்தான் மருத்துவம் என்ற நிலை ஏற்படும். எனவே தான் துறைமுகங்கள், தீ அணைப்பு நிலையங்கள், மருத்துவமனை களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்த போராட்டத்தை நடத்துவதாக தலைவர்கள் தெரிவித்தனர்.