tamilnadu

img

அதிகாரிகள் செய்த தவறால் பட்டியலின மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இடுகாடு; மீண்டும் ஒப்படைக்க உத்தரவு

தஞ்சாவூர், ஜூலை.13 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக, நூற்றாண்டு காலமாக பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த இடுகாடு மீட்கப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டியில், பட்டியல் இன மக்கள் பயன்பாட்டில் இடுகாடு இருந்தது. சிலரின் சூழ்ச்சியால் சுடுகாடு இருந்த இடம் பட்டா நிலம் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.  ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதர வாக அனைத்து அதிகார அமைப்பு களும் செயல்பட்டன. அதிகாரிகளின் ஒருதலைபட்சமான தகவலால் கீழமை நீதிமன்றமும் அந்த இடம் தனி யாருக்கு சொந்தமானது எனக் கூறி யுள்ளது. இதன் அடிப்படையில் இந்த  இடுகாட்டை பட்டியலின மக்களை  பயன்படுத்த விடாமல், காவல்துறை யை வைத்து தனி நபர்கள் அச்சுறுத்தி வந்தனர்.  இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவகுமாரின் தாயார் சிந்தாமணி அம்மாள் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல்  4 அன்று காலமானார். இதையடுத்து அவரது உடலை அங்கு அடக்கம் செய்யச் சென்றபோது தனி நபர்கள் தடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது.  

இதையடுத்து கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் ஆகியோர் அதிகாரிகளு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், “பொதுமக்களுக்கு உரிய இடுகாட்டில் தான் அடக்கம் செய்வோம், இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சடலத்தை  எடுத்துச் செல்வோம்” எனப் போராட்டம் நடத்தினர்.  பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து இருநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர்  குவிக்கப்பட்டனர். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியரும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை  ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதே இடுகாட்டில் சிந்தா மணி அம்மாள் உடலை அடக்கம் செய்தனர்.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர்.  இந்த நிலையில் கடந்த 2022 ஆகஸ்ட் 17 அன்று சானூரப்பட்டியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலை மையில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் கட்சியினர் தஞ்சை வருவாய் கோட்டாட்சியரைச் சந்தித்துப் பேசினர். அதன் பிறகு தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

சட்டப்பேரவைக் குழு விசாரணை

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சிவக்குமார், சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக புகார் அனுப்பி  இருந்தார்.  இந்த நிலையில் புதன்கிழமை அரசு  தலைமைக் கொறடா கோவி.செழி யன் தலைமையில், சட்டமன்ற உறுப்பி னர்கள் பங்கேற்ற, சட்டப்பேரவை மனுக்கள் குழு தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் சிவகுமாரி டம் விசாரணை நடத்தியது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.  வி.கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பி னர் கே.தமிழரசன், தேவதாஸ், மதியழகன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, “வரைபடத்தில் 1916-ஆம் ஆண்டு முதல் இடுகாடு என்று அம்புக்குறி இடப்பட்டிருந்தது. 1987-க்குப் பிறகு யூடிஆர் பட்டா மூலம் தனிநபருக்கு அந்த இடம் மாற்றப் பட்டுள்ளது. 100 ஆண்டு காலமாக தங்கள் முன்னோர்கள் அங்கு தான் புதைக்கப்பட்டார்கள்” என சட்டப் பேரவை குழுவிடம் எடுத்துரைக்கப் பட்டது.  

விசாரணைக்கு பிறகு சட்டப்பேர வை மனுக்கள் குழு, “நூறாண்டு கால மாக பயன்படுத்தி வந்த இடு காட்டிற்கான இடத்தை, பட்டியல் இன  மக்களிடமே ஒப்படைக்க வேண்டும். அதிகாரிகள் செய்த தவறு காரண மாக இடுகாட்டை பட்டியல் இன மக்க ளிடமிருந்து பறிக்க முடியாது. தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தில், இடு காட்டில் தங்கள் முன்னோர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் பட்டியல் இன  மக்கள் பல ஆண்டுகளாக மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த இடத்தை அவர்களிடமே இடுகாடு பயன்பாட்டிற் காக,  ஒப்படைக்க வேண்டும்.  உரிமை கொண்டாடிய  தனிநபர் களுக்கு, அரசு ஆதிதிராவிடர் நலத் துறை உதவியுடன் நிவாரணம் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.  பட்டியலின மக்களின் பக்கம் உள்ள  நியாயத்தை புரிந்து கொண்ட, சட்டப் பேரவை மனுக்கள் குழு இடுகாட்டிற் கான இடத்தை அவர்களிடமே ஒப்ப டைக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் நடவடிக்கை காரணமாக இடு காட்டிற்கான உரிமை மீட்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு சானூரப்பட்டி பகுதி பட்டியலின மக்கள் நன்றிதெரிவித்துள்ளனர்.

;