tamilnadu

img

போராடியது சிபிஎம்; நிறைவேற்ற வேண்டியது அரசு நீங்கள் யார் மிஸ்டர் சரவணன்?

மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றி யத்தில் உள்ள பரவை-துவரி மான் இடைய பாலம் கட்ட வேண்டுமென்று 2001-ஆம் ஆண்டு முதல் எழுப்பியவர் மேடைக்கலைவாணரும் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து மறைந்தவருமான தோழர் என்.நன்மாறன் அவர்கள் தான். மது ரையில் எங்கு கூட்டம் நடந்தாலும் சரி அந்தக்  கூட்டத்தில் இந்தக் கோரிக்கையை எழுப்பாமல் இருக்கமாட் டார். துவரிமான் பகுதியில் உள்ள பல் வேறு கிராம மக்களும் இந்தக் கோரிக்கை யை வலியுறுத்தி வந்தனர். ஒரு வழியாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பரவை-துவரிமான் இடையே பாலம் கட்டப்படும் என 110-விதியின் கீழ் உறுதியளித்தார். ஜெயலலிதா மறைவிற்குப் பின் முதல்வ ராகப்  பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் ஏழை ஜோடிகளுக்கு திரு மணம் செய்து வைக்கும் விழாவில் பங் கேற்றார். 120 ஏழை ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். அந்த  நிகழ்வில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனி சாமி, ‘‘பரவை முதல் துவரிமான் வரை வைகையாற்றின் குறுக்கே ரூ. 18 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது’’ எனக் கூறினார். (2018 மார்ச் 30)

இந்தப் பாலம் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று கடந்த ஒன்றைரை ஆண்டு களாக திறக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பல முறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய மேற்குத் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை அனை வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது. 2021 பிப்ரவரி 2 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம், கட்சியின் பரவை கிளைத் தோழர்கள் பாலத்தைப் பார்வையிட்டனர். பாலத்தின் நிலை குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து 2021-பிப்ரவரி 3-ஆம் தேதி தீக்கதிர் நாளிதழ் “மதுரை மாவட்டம் பரவை-துவரிமான் இடையில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இணைப்புப் பாலம் “பாராக”மாறிவிட் டது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டி ருந்தது.  அதில், “மதுரை நகர் மட்டுமல்ல, புறநகர் பகுதியிலும் போக்குவரத்து நெரி சலைக் குறைப்பதற்காகவும் மாவட்டத் தின் வடகரையையும் தென்கரையையும் இணைக்கும் வகையில் பரவை-துவரி மான் இடையே பல லட்சம் ரூபாய் செல வில் கட்டப்பட்ட பாலத்தின் நிலை குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கவலைப்பட வில்லை.பாலத்தின் ஒரு பகுதி மதுரை-மேலக்கால் இடையே துவரிமான் சாலை யோடு இணைக்கப்பட்டுவிட்டது. மறு புறத்தில் பரவை பிரதான சாலையோடு இணைக்கப்படவில்லை. பாலம் வைகை யாற்றில் “எனக்கென்ன” என  நிற்கிறது. இதற்குக் காரணம் பரவை வைகையாற்றி லிருந்து பிரதானசாலையோடு இணைக் கும் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. 110- விதியின் கீழ் முதல்வரால் அறிவிக்கப் பட்ட பிறகும் பரவை பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் தான்  கடந்த செவ் வாய்க்கிழமை பரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அநத ஆர்ப்பாட்டத்தில் பாலத்தை திறக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டது.

பாஜக பிரமுகருக்கு  ஏன் எரிகிறது?

ஆர்ப்பாட்டம் நடத்திய செய்தியை பத்திரிகைகள் மூலம் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் ‘பிரமுகர்’ டாக்டர் சர வணன்  உடனடியாக பாலத்தைச் சென்று பார்வையிட்டுளளார். ஒரு மாதத்திற்குள் சாலை அமைப்பதற்கான வேலைகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத் துள்ளோம்; நில உரிமையாளர் களுக்கு உரிய தொகை வழங்குவதற்கான ஆவ ணம் தமிழக நிதியமைச்சரின் அலுவல கத்தில் உள்ளது.அதற்காக நிதியமைச் சரை விரைவில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம்; ஆனால், அதனை கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களது முயற்சி போல் சித்தரித்து திசை திருப்ப முயல் கின்றனர். யாரோ பெற்ற குழந்தைக்கு யாரோ பெயர் வைப்பது போல் உள்ளது இந்த செயல்’’ என்று சம்பந்தமே இல்லா மல் ஆஜராகி அங்கலாய்த்திருக்கிறார். பாலத்தை திறக்க வேண்டுமென்பது தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை. அதிலுள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தான். இதில் பாஜக வுக்கு என்ன வேலை? வேண்டுமானால், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பி னராகவும் கூட்டுறவுத்துறை அமைச்சராக வும் இருந்த செல்லூர் ராஜூவிடம், பாலத்தை ஏன் திறக்காமல் விட்டீர்கள் என டாக்டர் சரவணன் கேட்பது தான் பொருத்தமாக இருக்கும். இந்தக் கோரிக்கையை முதன் முதலில் எழுப்பியது யார், தெருமுனைக் கூட்டங்களில் தொடர்ந்து பேசியது யார், போராடியது யார் என்ற உண்மையை செல்லூர் கே.ராஜூவின் நண்பரான முன் னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னரிடம் கூட டாக்டர் சரவணன் உண்மையை கேட்டு அறிந்துகொள்ளலாம். யாரோ பெற்ற குழந்தைக்கு யரோ பெயர் வைப்பது போல உள்ளது என்கிறார் பாஜகவிற்கு எசன்ற டாக்டர் சரவணன், உண்மையை அறிந்து கொண்டால் யார் பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைக்க முயற்சிக்கின்றனர் என்பது தெரிந்து விடும்.

;