tamilnadu

img

மதுரையில் முடங்கிப் போன செங்கல் உற்பத்தி....

சேடபட்டி:
மதுரை மாவட்ட நிர்வாகம் செம்மண் அள்ள அனுமதிமறுப்பதால் சுமார் 50 லட்சம்செங்கல் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர்-60, துள்ளுக்குட்டி நாயக்கனூர்-65, சூலப்புரம் மற்றும் மல்லப்புரம்-50, வண்டாரி-30, சாப்டூர்-10 என 200-க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன.இதை நம்பி சுமார் 1,500 தொழிலாளர்கள் உள்ளனர். முன்பு கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டிருந்தது. கொரோனா கட்டுக்குள் வந்தபிறகும் கடந்த மூன்று மாதங் களாக செங்கல் உற்பத்தி நடைபெறவில்லை.இதற்குக் காரணம் மதுரை மாவட்ட நிர்வாகம் செம்மண் அள்ள அனுமதி மறுப்பதுதான் என்கிறார் பலஆண்டுகள் இந்தத் தொழிலில் அனுபவம் உள்ள துள் ளுக்குட்டி நாயக்கனூரைச் சேர்ந்த இராஜா சங்கர். அவர் மேலும் கூறியதாவது:-

கடந்தாண்டும் மண் அள்ள அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்கனவே வைத்திருந்த மண்ணை வைத்து கடந் தாண்டு சமாளித்துள்ளனர். தற்போது ஒரு சதவீதம் கூட தொழில் நடைபெறவில்லை. டி.கிருஷ்ணாபுரம் அருகிலுள்ள மணலூத்து காட்டுப்பகுதியில் செம்மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். ஒவ்வொரு சூளையிலும் சீசன்காலங்களில் 50 ஆயிரம் செங்கல்கள் உற்பத்தி செய்ய முடியும். மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகளையும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களையும் காப்பாற்ற வேண்டும். செங்கல் உற் பத்தி நடைபெற்றால் தொழிலாளர்களுக்கு நாளொன் றுக்கு ரூ.700 கூலியாகக் கிடைக்கும். சுமார் ஐந்து மாதங்களுக்கு தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.செங்கல் உற்பத்தி தடைபட்டால் அதன் விலை உயரும். ஆட்சியர் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

;