tamilnadu

img

ஒமிக்ரான் : அலட்சியம் வேண்டாம்

ஒமிக்ரான் வைரஸ் நவம்பர் 19-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய தனியார் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா மரபணு வரிசைமுறைக்காக வந்த 8 கொரோனா வைரஸ் மாதிரிகள் ஆய்வு செய்யப் பட்டு கொண்டிருக்கும் பொழுது ரக்வெல் வியனா என்ற ஆய்வக ஊழியர் தனிப்பட்ட கவனத்தில் ஒமிக்ரான் வைரஸ் வகையை கண்டுபிடித்து கூறி யுள்ளார். இதில் சுவாரஸ்யமான விசயம் என்ன வென்றால் ரக்வெல் வியனா மரபணு வரிசைமுறை யில் தவறு இழைத்துவிட்டதாக எண்ணி ஆராச்சியாளர்களிடம் ஒமிக்ரான் மாதிரியை காட்டியுள்ளார். ஆனால் ரக்வெல் வியனா செய்தது தவறல்ல, இது உலகிற்கு தந்துள்ள மிகப்பெரிய எச்சரிக்கை அறிவிப்பு ஆகும். 

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க முடியாது. பயணத் தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கப்படும். மக்களின் இயல்பு வாழ்க்கை, வாழ்வாதாரத்தின் மீது பெரும் சுமையையே ஏற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.

ஒமிக்ரான் பரவலால் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி தொடங்கவிருந்த சர்வதேச விமானச் சேவைகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய  விமான போக்குவரத்துத் துறை அறிவிப்பு. ஒமிக்ரான் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்ல செவ்வாயன்று தடை விதிக்கப்பட்ட்டது. 

ஒமிக்ரான் பரவலால் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முன்கூட்டியே தொடங்க உள்ள தாக ஜெர்மனியின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

ஒமிக்ரான் பரவலை பிரிட்டன் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒமிக்ரான் நோயாளிகளின் சிறிய அளவு எண்ணிக்கை மிக  விரைவில் பெரிய எண்ணிக்கையாக மாற வாய்ப்புள்ளது என லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ ஹேவர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஒமிக்ரான் வைரஸ் பரவலால் கட்டுப்பாடு களை கடுமையாக்க அமெரிக்கா உத்தரவு. வெளிநாட்டில் இருந்து திரும்பும் அமெரிக்கர்கள், தடுப்பூசி போடப்பட்ட, தடுப்பூசி போடாதவர்கள் யாராக இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சனின் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டை ஸ்லோவேனியா நிறுத்தியது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் ஒருவர் அரிதான இரத்த உறைவு நிலையில் உயிரிழந்துள்ளார். இதனால் ஸ்லோவேனியா ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்தும் பணியை தற்காலிமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.