சென்னை,டிச.19- வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 31 பேருக்கு ஒமைக்ரான் உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டு மாதிரிகள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மூலம் பரவாமல் இருப்பதற்காக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களில் 31 பேரின் மாதிரிகள் பெங்களூர் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் திங்கள்(டிச.20) வெளிவரும் அப்போதுதான் ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா என்பது உறுதியாக தெரிய வரும் என்றார்.