tamilnadu

img

ரயில்வே தொழிலாளர்களின் நம்பிக்கை நாயகர்!

அக்டோபர் 11, தட்சிண ரயில்வே எம்ப்ளா யிஸ் யூனியனின் வரலாற்று நாயகன் தோழர் கே.அனந்தன் நம்பியாரின் 31ஆவது நினைவு தினம். 1938ஆம் ஆண்டு பொன்மலை பணிமனையில் எரிபொருள் எழுத்தராக பணியில் சேர்ந்த தோழர் கே.அனந்தன் நம்பியார் அடுத்த ஆண்டே அன்றைய சவுத் இந்தியன் ரயில்வே லேபர் யூனியனில் இணைந்து தீவிரமாக செயல்படத் துவங்கினார். இரண்டாம் உல கப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தொழிலாளர் இடையே யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடு பட்டார். தியாகி பரமசிவத்தின் மறைவிற்கு பின் 1942இல் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனார். முழு நேர சங்க பணிக்காக 1943இல் வேலையை ராஜினாமா செய்தார். முதல் சம்பளக் கமிஷன் வரக் காரணமான 1946 வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கி மலபார் காவல் துறையின் அடக்குமுறைக்கு உள்ளானார். இந்தப் போராட்டத்தில் தான் பொன்மலை சங்கத்திட லில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தோழர்கள் இன்னுயிர் நீத்தனர். அதேபோல் 1960, 1968 வேலைநிறுத்தப் போராட்டங் களிலும் நம்பியார் தலைமை பாத்திரம் வகித்தார். ஜன நாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்த இந்திரா காந்தியின் அவசர கால அடக்குமுறைக்கு எதிராகப் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். போனஸ் கோரிக்கைக்காக நடைபெற்ற 1974 வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு சங்கங்களை இணைத்து களம் கண்டார்.

1958ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடத்திய 10 நாள் உண்ணாவிரதம் தென்னகத்தை குலுக்கியது. அதை தொடர்ந்து பர்சனல் பிராஞ்சு உருவாக்கப்பட்டது. விசரணையின்றி வேலை நீக்கம் செய்யக்கூடாது என அவர் நடத்திய போராட் டம் தான் டிஏஆர் விதிகளை உருவாக்கியது 1946ஆம் ஆண்டு ரயில்வே தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் நம்பியார் ரயில்வே அமைச்சர் சந்தா னத்தை தோற்கடித்து 1952ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினரானார். 1962, 1967 மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். மக்களவையை தொழிலாளர் கோரிக்கைகளை எழுப்பும் மன்றமாக மாற்றினார். 50 ஆண்டு காலம் ரயில்வே தொழிற்சங்க பணிக் காக தன்னை அர்ப்பணித்த தோழர் தட்சிண ரயில்வே  எம்ப்ளாயிஸ் யூனியன் பொதுச்செயலாளர், தலைவர், துணைத் தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தார்.  1991 அக்டோபர் 11 அன்று மரண மடைந்தார். ரயில்வே ஊழியர் இன்று அனுபவிக்கும் பல்வேறு உரிமைகளில் அவரது முத்திரை உள்ளதை யாராலும்  மறுக்க முடியாது, அவரது நினைவை போற்றுவோம், அவர் வழி நடப்போம். 

வி.அரிலால், 
டிஆர்இயூ பொதுச் செயலாளர்

;