புதுதில்லி,டிச.12- கொரோனா பரவல் குறைந் ததையடுத்து, நடப்புஆண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி யுள்ளன. இதனால், தேர்வுக ளையும் ஆன்லைன் முறை யில் நடத்தாமல் நேரடி தேர்வு களாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. அந்த வகையில், இனி கல்லூரிகள், பல்கலைக்கழ கங்களில் ஆன்லைன் தேர்வு கிடையாது, நேரடியாக மட்டுமே தேர்வுகள் நடை பெறும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தி யுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு தல்களை பின்பற்றி தேர்வு கள் நடத்த வேண்டும் என்று யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதத்தில் தெரி வித்துள்ளார்.