tamilnadu

img

நிவர் புயல்.... மதுரை விமான நிலையஇயக்குநர் பேட்டி

மதுரை:
மதுரை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்க  கூடுதலாக ஐந்து பார்க்கிங், இரண்டு ஹெலிகாப்டர்கள் நிற்க பிரத்தியோக பார்க்கிங் உருவாக்கப்பட உள்ளது என்று மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தெரிவித்தார்.
அவர் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நிவர்புயல் காரணமாக மதுரை விமான நிலையத்திலும் சில முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.மதுரை விமான நிலையத்தில் ஏழு விமானங்கள் நிற்கும்இடவசதி உள்ளது. இரண்டு விமானங்களை வெளியிலிருந்து இருந்து மதுரையில் நிறுத்துவதற்கு கேட்டுள்ளனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் கூடுதலாக ஐந்து விமானங்கள் நிறுத்தவும், இரண்டு ஹெலிகாப்டர்கள் நிறுத்தவும் பிரத்தியோக பார்க்கிங் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தில் தற்போது இரண்டாயிரத்து ஆயிரத்து 300 மீட்டர் ஓடுதளம் உள்ளது. கூடுதலாக 1,500 மீட்டர் விரிவாக்கம் செய்யப்படஉள்ளது. இதற்காக ஏற்கனவே 66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மீதமுள்ள 430 ஏக்கருக்கு 160 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு  நில உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள விமான நிலைய முனையக் கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் வேறு இடத்தில் அமைக் கப்படுகிறது. அந்த கட்டடத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாடு, தொழில்நுட்ப மைய அலுவலகம் இயங்குவதற்கான கட்டடம் ரூ.84 கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ளது என்றார்.

;