tamilnadu

img

ரூ.35,000 கோடியில் இயற்கை எரிவாயு திட்டம்: அமைச்சர் தகவல்

இயற்கை எரிவாயு குழாய் அமைப்பு திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் 1,224  கி.மீ., நீளத்துக்கும், கெயில் நிறுவனம் 319 கி.மீ., நீளத்துக்கும் செயல்படுத்தி வருகிறது. பெட்ரோலிய பொருட்களுக்கான குழாய் அமைப்பு திட்டத்தை பிரி சிலி நிறுவனம் 700 கி.மீ., நீளத்துக்கும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேசன் லிட்., நிறுவனம் 320 கி.மீ., நீளத்துக்கும், கொச்சின் சேலம் பைப்லைன் பிரைவேட் லிட்., நிறுவனம் 210 கி.மீ., நீளத்து க்கும் செயல்படுத்தி வருகின்றன. இதன் முதலீடு ரூ.14,200 கோடியாகும். நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக் கான வரைவு கொள்கையை, மாநில அளவில் டிட்கோ தயாரித்திருக்கிறது. நகர எரிவாயு  விநியோக வலையமைப்பை, மாநிலத்தி லுள்ள 38 மாவட்டங்களிலும் செயல்படுத்த அனுமதி பெற்றுள்ள 7  நிறுவனங்களுடன், டிட்கோ ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. 2,785 விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவும், 22,794,795 வீடுகளுக்கு குழாயின் மூலம் இயற்கை எரிவாயுவும் வழங்குவதற்கான இத்திட்டம், ரூ.35,000 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் என்றும். இந்த பணிகள் 8 ஆண்டுகளில் நிறைவடையும். தமிழ்நாடு அரசு தளர்வில்லாத ஊக்கத் தோடு செயல்படுவதால் தொழில் முதலீடு களை பெருமளவில் ஈர்த்து லட்சக்கணக்கான  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி மாநில பொருளாதாரத்தை வலுவ டையச் செய்துள்ளது.  இதனால்தான் பொரு ளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தற்போது தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக  விளங்கி வருகிறது. இந்திய அளவில் இரண்டாவது பெரிய  பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு 2020 - 21 ஆம் நிதியாண் டில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.47 பங்களிப்பை தமிழ்நாடு அளித்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் 19.02 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2021 - 22 ஆம் நிதி யாண்டில் 21.79 லட்சம் கோடியாக வேகமாக  உயர்ந்துள்ளது.

உற்பத்தி மையமாக தமிழ்நாடு!

மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன்  உதிரி பாகங்கள், ஜவுளி மற்றும் ஆயத்த  ஆடைகள், தோல் பொருட்கள், ரசாயனங் கள், மின்னணு பொருட்கள், எந்திரங்கள் மற்றும் கட்டுருவாக்கப்பட்ட உலோக பொருட்கள் போன்ற துறைகளில் கணிசமான அளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ள காரணத்தால் தமிழ்நாடு அகில இந்திய அளவில் ஒரு உற்பத்தி மையமாக விளங்கு கிறது.

புதிய தொழில் பூங்காக்கள்!

தொழில் நிறுவனங்களுக்கான நிலங்கள் கையிருப்பு அடிப்படையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும் மாநிலம் முழு வதும் சமச்சீரான வளர்ச்சியை உறுதிப் படுத்தும் வகையில் தொழில் கட்டமைப்பு களை மேம்படுத்த கோவை, பெரம்பலூர்,  மதுரை, வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ங்களில் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்காவும், திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், தேனி ஆகிய பகுதிகளில் உணவுப் பூங்காக்கள் நிறுவப்படும். மாநல்லூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் முறையே மின் வாகனங்களுக்கான தொழில் பூங்கா மற்றும் வருங்கால நகர் திறன் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் பிள்ளைப் பாக்கம் மற்றும் மாநல்லூரில் மின்னணுவியல் உற்பத்தி தொகுப்புகள் ஏற்படுத்தப்படும். விருதுநகரில் ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா, ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தோல் காலணி கள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தி தொகுப்புகள், சென்னை நந்தம்பாக்கத்தில் நிதி நுட்ப நகரம் அமைக்கப்படும்.

100 பில்லியன் ஏற்றுமதி இலக்கு!

2030ஆம் ஆண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி என்ற  இலக்கை அடைந்துவிட, ஏற்றுமதி நிறுவ னங்களுக்கு தேவையான பொது உள்கட்ட மைப்பு வசதிகள், தொழிலகங்கள் மற்றும் தொழிற் கூட்டமைப்புகளின் பங்களிப்புடன் ரூபாய் 100 கோடியில் ‘சிறப்பு நிதியம்’ உரு வாக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிதியத்தின் மூலம் திறன் மையங்கள், சோதனை மையங்கள், ஏற்றுமதிக் கிடங்குகள் மற்றும் உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள் போன்ற ஏற்றுமதிக்கு தேவை யான பொது உள்கட்டமைப்புகள் நிறுவப்படும்.

ஒற்றைச் சாளர இணையதளம்...

24 துறைகளைச் சார்ந்த 100 சேவைகளை மின்னணு வடிவில் அளிக்கும் வகையில் ஒற்றைச் சாளர இணையதளம் 2.0 திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக மேலும் 100 சேவைகளை வழங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விரைவில் வெளியாகும் கொள்கைகள்!

மாநிலத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் செயல்பாடு களின் ஒரு பகுதியாக உயிர் அறிவியல் வளர்ச்சிக் கொள்கை, ஆராய்ச்சி மற்றும்  மேம்பாட்டு கொள்கை, தோல் மற்றும் காலணி  கொள்கை, மின்னணு வாகன கொள்கைக் கான மேம்பாடுகள் போன்றவற்றை வழிகாட்டி  நிறுவனம் வடிவமைத்து வருகின்றது. இந்த கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு அது குறித்த ஆலோசனைகளும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்குகள்...

கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிறுவனம் சிப்காட். தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் சுமார் 35,000  ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து, விரிந்து, அடிப்படை வசதிகள் மற்றும் துணை உள்கட்ட மைப்பு வசதிகளை கொண்டுள்ளது சிப்காட்  நிறுவனம். மாநிலத்தில் 6 சிறப்பு பொரு ளாதார மண்டலங்களுடன் 24 தொழில் பூங்காக்களை உருவாக்கியது. இதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

45,000 ஏக்கரில்...

அடுத்த 5 ஆண்டு காலத்திற்குள் வரவிருக்கும் மற்றும் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள தொழிற்பூங்கா களுக்கான நீளம் உட்பட 45,000 ஏக்கர் அளவிற்கான நில வங்கியை சிப்காட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. புதிய  தொழில் முனைவோர்களுக்கு தேவையான நிலத்தை தாமதமின்றி ஒதுக்கீடு செய்வதற்கு போதுமான அளவு நிலங்களை கையகப் படுத்த வேண்டியது அவசியமாகிறது. இது  தமிழ்நாட்டில் ஒரு தனித்த அம்சமாகும். இந்த  நில வங்கி தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும்.

பட்டாபிராமில் டைடல் பார்க்!

சென்னையின் பிற பகுதிகளில் குறிப்பாக  வட மேற்குப் பகுதியில் வளர்ந்து வரும் சூழலில் தொழில்நுட்ப பூங்காவின் தேவை மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தாலுகா பட்டாபிராம் பகுதியில் தகவல்  தொழில்நுட்பப் பூங்கா ஒன்று டைடல்  பார்க் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 11.4 1 ஏக்கர் நிலப்பரப்பில் 5.5 லட்சம் சதுர அடி கொண்ட இந்த பூங்கா  சுமார் 280 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகி வருகிறது. இதற்கான கட்டுமானப்  பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.  இப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும்.

ரூ.5000 கோடியில் ஐடி பார்க்!

சென்னை தரமணியில் டிட்கோ மற்றும் டிஎல்எப் நிறுவனம் இணைந்து சுமார் 27 ஏக்கர் நிலப்பரப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை ரூபாய் 5000 கோடி செலவில்  நிறுவி வருகிறது. இங்கு உலக அளவில் மிகப்பெரிய அலுவலக வளாகம் 7.7 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த  தகவல் தொழில்நுட்பப் பூங்கா மூலம் 70 ஆயிரத்துக்கும் அதிகமான தகவல் தொழில் நுட்ப நிபுணர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். (தொழில்துறை மானியக்கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து  அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதி லிருந்து)