கோஹிமா, டிச.27- நாகாலாந்தில் சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று முதல்வர் நெய்பியு ரியோ ஞாயிறு பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு ட்வீட் செய்துள்ளார். இராணுவத்திற்கு வானளாவிய அதி காரங்களை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை இந்த மாத தொடக்கத்தில் மோன் மாவட்டத்தில் இராணு வம் நடத்திய துப்பாக்கிச்சூடு அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவத்தில் 14 பேர் பலியாகினர. இதையடுத்து நாகலாந்து தலை நகர் கோஹிமா உட்பட மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது
குறிப்பிடத் தக்கது. அசாம் முதலமைச்சரும், வடகிழக்கு மாநி லங்களில் பாஜகவின் முக்கிய பிரமுகருமான ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொண்ட கூட்டத்தில், “மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை யை உள்ளடக்கிய குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக்குழு 45 நாட்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் மற்றும் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் ஆயு தப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் திரும்பப்பெறப்படும்” எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது. மோன் மாவட்டத்தில் நடைபெற்ற துப் பாக்கிச்சூடு குறித்து ராணுவ நீதிமன்றம் நட வடிக்கை எடுக்கும். விசாரணையின் போது அடையாளம் காணப்பட்ட நபர்கள் உடனடி யாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள். மோன் சம்பவத்தில் மேலும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், நாகாலாந்து சட்டமன்றம், வடகிழக்கில், குறிப்பாக நாகாலந்து மாநி லத்தில் ஆயுதப் படைகள் (சிறப்பு அதி காரங்கள்) சட்டத்தை திரும்பப்பெற வேண்டு மென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி யிருந்ததும் குறிப்பிடத்தக்கது.