மாஸ்கோ, அக். 23 - ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்ச மாநாடு ரஷியாவின் கசான் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்மாநாட்டிற்காக ரஷ்யா சென்றி ருந்த பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனா திபதி ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. அதன்படி இருநாட்டுத் தலைவர் களும் சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு புதனன்று அதிகாரப்பூர்வ சந்திப்பை மேற்கொண்டனர். கிழக்கு லடாக்கின் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோடு பகுதியில் ரோந்து பணிகள் மேற்கொள்வதில் இந்தியா - சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்ட இரண்டு நாட்களில் இந்த சந்திப்பும் நடத்துள்ளது. இந்த சந்திப்பை, தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, “இந்திய - சீன உறவு நமது இந்திய மக்களுக்கும், பிராந்திய மற்றும் உலக ளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக் கும் முக்கியமானது. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர உணர்திறன் இரு நாட்டு உறவுகளுக்கு வழிகாட்டும்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடங்களில் நடைபெற்ற ஜி-20 மாநாடு உள்ளிட்ட சில மாநாடுகளில் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடந்ததே தவிர, அதிகாரப்பூர்வமான இருதரப்பு சந்திப்பு நடத்தப்படவில்லை. கடைசியாக இரு நாட்டு தலைவர்களும் 2019 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சிமாநாட்டில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.