tamilnadu

img

சென்னை ஓபன்: மகுடம் சூடப்போவது யார்?

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஆண்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் ரஃபேல் நடால், கார்லஸ் மோயா, ஸ்டான் வாவ்ரிங்கா, ராபர்டோ பாட்டிஸ்டே, டேனியல் மெத்வெடேவ், மரியன் சிலிக், பேட்ரிக் ராபர்ட், இந்தியாவின் நட்சத்திரங்களான லியாண்டார் பெயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் வர்மன், ரோகன் போப்பன்னா, ராம் குமார் ராமநாதன் என பலரும் கலந்து கொண்டு முத்திரை பதித்தனர். அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த போட்டி 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்தும் முயற்சியை அகில இந்திய டென்னிஸ் சம்மேள னமும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் எடுத்து வந்தது.

சென்னையில் முதல் முறையாக நடைபெறும் இந்த டென்னிஸ் திருவிழாவில் உலகின் முன்னணி வீரா ங்கனைகள்  பலரும் பங்கேற்றதால் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்காவின் ஆலிசன் ரிஸ்கே அமிர்தராஜ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும், அச த்தலாக விளையாடிய இந்திய வீராங்கனை கர்மன் தண்டி, ஜப்பா னின் நாவோ ஹிபினோ, சீனாவின் கியாங் வாங் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை கொடுத்தது.

ரேசில் முந்தும் வீரங்கனை

இந்தத் தொடரின் மிக இளம் வயது(17) வீராங்கனையான செக் குடியரசின் லின்டா புருவிர்டோவா, மூத்த வீராங்கனையும் இரண்டு குழந் தைகளுக்கு தாயுமான ஜெர்மனியின் தாத்ஜனா மரியோ (35), டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரம். முன்னாள் ஐந்தாம் நிலை வீராங்க னையான கனடாவின் பவுச்சர்ட், அர்ஜென்டினா நாடியா பொடோ ரஸ்கா, போலாந்து மெக்தா லினெட், கிரேட் பிரிட்டனின் கெட்டி ஸ்வான், ரஷ்யாவின் வர்வரோ கிரச்சேவோ ஆகியோர் அடுத்தடுத்த சுற்றுகளில் சளைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு ஆடியதால் ரசிகர்களும்  ஆரவாரத்துடன் வீராங்கனைகளை  உற்சாகப்படுத்தினர்.  தற்போது இறுதி கட்டத்தை எட்டி விட்டதால் கோப்பையை வெல்லப் போவது யார்?  என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. விடுமுறை நாளான சனிக்கிழ மையன்று (செப்.17)  இரவு 7 மணிக்கு முதலாவது அரை இறுதி போட்டி தொடங்கியது. ஆட்டத்தில் இரண்டு இளம் வீராங்கனைகள் பலப்பரீட்சை யில் ஈடுபட்டனர்.  சர்வதேச ஜூனியர் பட்டங்களை வென்றது மட்டுமின்றி கிராண்ட்ஸ்லாம் ஜூனியர் போட்டியில் பட்டம் வென்ற  அனுபவம், கடந்த ஆண்டு விம்பிள்டன் போட்டி வரை அழைத்துச் சென் றது. தற்போது சென்னை மைதா னத்தில் மிரட்டி வரும் 17 வயது வீரா ங்கனை லின்டா புருவிர்டோவா ரேசில் முந்துகிறார். இளம் கன்று பயம் அறியாது என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியாக தாக்குதல் நடத்தி வெற்றிகளை குவித்து  வருவதால் இவருக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. 

அதேநேரம் தனது விடாப்பிடியான போராட்டம், நேர்த்தியான ஆட்டத் தால் அனுபவ வீராங்கனைகளான ஜெர்மனியின் தாத்ஜனா மரியோ, கனடாவின் பவுச்சர்ட் இரு வரையும் புரட்டிப் போட்டு அரை யிறுதிக்குள் நுழைந்த அர்ஜெண்டா வின் 25 வயதாகும் நாடியா பொடரோஸ்கா பெரும் சவால் கொடுப் பார் என்ற எதிர்பார்ப்பும் அதிக ரித்திருக்கிறது.  இவரது குடும்பம் விளையாட்டு பாரம்பரியம் மிக்கது இல்லை என்றாலும் விம்பிள்டன் பிரஞ்சு ஓபன் போட்டியின் அரை இறுதி வரை முன்னேறிய முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சாதனை படைத் தவர். அதுமட்டுமின்றி ஒலிம்பிக் போட் டியிலும் விளையாடி இருக்கிறார். உலக தரவரிசை பட்டியலில் 36-வது இடம் வகிக்கும் இவர் லின்டாவுக்கு மிக கடும் நெருக்கடியை கொடுப்பார் என்பதால் இந்த ஆட்டத்தை நேரில் காண்பதற்கு ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டினர். இரண்டாவது அரையிறுதி ஆட்டத் தில் போலாந்தின் டென்னிஸ் பயிற்சி யாளர் மகளான மிக்தா லினிட் உள்ளூர் கிளப் போட்டிகளில் அசத்தியவரும் சர்வதேச போட்டிகளில் அதிரடிக்கும் வலுவான தாக்குதலுக்கும் பெயர் பெற்ற இவரை தரவரிசை பட்டியலில் 163 வது இடத்தில் உள்ள கிரேட் பிரிட்டனின் (இங்கிலாந்து) 23 வய தான வீராங்கனை கேட்டி ஸ்வான்  எதிர்கொண்டார்.  ஏழு வயதில் டென்னிஸ் மட்டை யை பிடித்த ஸ்வான் 10 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச போட்டியில் பட்டம் பெற்றவர். அவரது குடும்பம் அமெரிக்காவில் வசித்து வந்தாலும் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இருவரும் சம மான பலத்தில் மோதியதால் ஆட்டத் தில் அனல் பறந்தது.

முதல்வர் பங்கேற்பு!

ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெறும் இறுதி போட்டியில் இந்த நான்கு பேரில் ஒருவர் ஒற்றையர் சாம்பி யன் பட்டத்தை வென்று மகுடம் சூடு வதுடன் 26.50 லட்சம் ரூபாய் முதல் பரிசு பெறுகின்றார். இரண்டாவது இடத்தை பிடிக்கும் வீராங்கனைக்கு 15.77 லட்சம் ரூபாயும் கேடயமும் வழங்கப்படுகிறது. இறுதி ஆட்டத்தை நேரில் கண்டு களிக்கும் முதலமைச்சர் மு க ஸ்டா லின் வெற்றி பெறும் வீராங்கனை களுக்கு பரிசு கோப்பையை வழங்கி கவுரவிக்கிறார். இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.9.58 லட்சமும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் ஜோடிக்கு ரூ.5.38 லட்சமும் பரிசுத் தொகையும் கோப்பையும் வழ ங்கப்படுகிறது. இதனால், பட்டத்தை வென்று மகுடம் சூடுவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

 

;