tamilnadu

img

இரா.முத்தரசன் ஆறுதல்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எழுத்தாளருமான தோழர் என். ராமகிருஷ்ணன் டிசம்பர் 12 அன்று காலமானார்.  அன்னாரது மறைவுச் செய்தியறிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் டிசம்பர் 14 செவ்வாயன்று மதுரை நரிமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் என். ராமகிருஷ்ணனின் மகள் சாந்தி, மகன் மணவாளன் (எ) கண்ணன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிபிஐ புறநகர் மாவட்டச் செயலாளர் காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா, வடக்கு - 1 ஆம் பகுதிகுழுச் செயலாளர் வி.கோட்டைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.