tamilnadu

மதுரை விரைவு செய்திகள்

6 பெண்களை  ஏமாற்றி திருமணம்: மோசடி ஆசாமி கைது

திருநெல்வேலி, டிச .1- நெல்லை, தூத்துக்குடியில் 6 பெண்க ளை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர்(40). இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திரு மணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்க மாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகி றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுகுறித்து பாளையங் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  அதன்பேரில், ஆய்வாளர் ராமேஸ் வரி, உதவி ஆய்வாளர் வள்ளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளி யானது. வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே  5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும்,ஆறாவதாக பாளையங் கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் கோவில்பட்டியில் உள்ள தனது 4-ஆவது மனைவி வீட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தனிப்படை அமைத்து வின்சென்ட் பாஸ்கரை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் வின்சென்ட் பாஸ்கர், மற்றும் அவருக்கு உடந்தையாக உறவினா் என்று கூறி நடித்த சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த பிளாரன்ஸ் (58), சுவிசேஷபுரம் பகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வி (56) ஆகிய 3 பேரை யும் காவல்துறையினர் செவ்வாய்கிழமை மாலை நெல்லையில் கைது செய்தனர்.  மேலும், தலைமறைவாக உள்ள திருமண புரோக்கர் இன்பராஜை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்ப வத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ஒவ் வொரு திருமணத்தின்போது, வெவ்வேறு பெயர்களை கூறியும், ஊர்களை மாற்றிச் சொல்லியும் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புறக்காவல் நிலையம், ஆம்புலன்ஸ் சேவை  எஸ்பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி,டிச.1 சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேய்க்குளம் பஜார் பகுதியில் காமராஜர் சமூக நல அறக் கட்டளை சார்பாக முதலுதவி சிகிச்சை உபகரணங்கள், மருத்துவ அலுவலர் கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ். ஜெயக்குமார் துவக்கி வைத்தார். மேலும்,  அப்பகுதி பொது மக்கள் சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தையும் திறந்து வைத்தார். விழாவில் எஸ்பி பேசுகையில், இந்த ஆம்புலன்ஸ் சேவை என்பது மிக முக்கிய மானதாகும். இந்த பகுதியில் ஒரு விபத்து ஏற்படும்போது, விபத்தில் அடிப்பட்டவர்க ளை காலதாமதமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல இந்த ஆம்புலன்ஸ் சேவை பேருதவி தயாக இருக்கும். அதேபோன்று பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது இப்பகுதியில் புதிதாக புறக் காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளித்து தங்களது குறை களை இங்கு நிவர்த்தி செய்து கொள்ள லாம். மேலும் தற்போது சிசிடிவி காலத் தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடை பெறாமல் தடுக்கலாம், மேலும் நடை பெற்ற குற்றங்களை எளிதாகவும் கண்டு பிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிக ளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீங்கள் முன்வர வேண்டும்  என்றார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை காமராஜர் சமூக நல அறக்கட்டளை சார்பாக கரிக்கோல்ராஜ், மகேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.  இவ்விழாவில் சாத்தான்குளம் காவல நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் உட்பட காவல்துறையினர் மற்றும் பேய்க்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்டாலின், ஸ்ரீவெங்கடேசபுரம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இளம்பெண் பலி

தூத்துக்குடி,டிச.1 தூத்துக்குடி அருகே தீவிபத்தில் காயம் அடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வெள்ளாரம் கிராமம், தெற்கு காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மகேஸ்வரி (29). கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. கடந்த 19ஆம் தேதி வீட்டில் தீபமேற்றிய போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றி யுள்ளது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய் இரவு உயிரிழந்தார்.  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை:  வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு

தூத்துக்குடி,டிச.1 ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தொலை கொ டுத்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவை குண்டம் அருகேயுள்ள பொன்னங் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் மகன் சீனி (23). இவர் 17 வயது சிறுமியை காதலிப்ப தாக கூறி, அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அவரை  தேடி வருகின்றனர்.

2 வருடத்திற்கு பின் மீண்டும்  அரசு பேருந்து இயக்கம்

அரசர் குள மக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி,டிச.1 2 வருடம் கழித்து மீண்டும் அரசர்குளத்துக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த அரசு போக்குவரத்து கழக வணிக மேலாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சேரகுளம் அருகே உள்ள அர சர்குளம் செல்லும் பேருந்து நிறுத் தப்பட்டு விட்டது. கொரோனா பரவல் குறைந்த பிறகு அந்த பேருந்து இராமனுஜம்புதூருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த பேருந்து அரசர்குளம் செல்ல வில்லை. இதுகுறிததுபல முறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. இதற்கிடையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வண்ணார்பேட்டை அரசு போக்கு வரத்து கழகத்தில் உள்ள வணிக மேலாளர் சசிகுமாரை சந்தித்து மனு கொடுத்தார். அதிகாலை யில் அந்த பேருந்து இல்லாமல் இன்றி அரசர்குளம், வல்லகுளம், வல்லகுளம் ஏ.டி காலனி மக்கள் பாதிக்கப்படுவதை எடுத்து கூறி னார். எனவே இந்த மனுமீது நடவ டிக்கை எடுத்த வணிக மேலாளர் சசிகுமார் உடனடியாக அசரர்குளத் திற்கு அதிகாலையில் பேருந்து சென்று வர அறிவுறுத்தினார்.    அதன் படி புதனன்று காலை யில் அரசர்குளத்துக்கு பேருந்து சென்றது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற் கான நடவடிக்கை எடுத்த வணிக மேலாளர் சசிகுமார் அவர்களுக் கும் நடவடிக்கை எடுத்த அனை வருக்கும் அரசர்குளம் வல்ல குளம் கிராம மக்கள் நன்றி தெரி வித்தனர்.
 

;