tamilnadu

img

முளைப்புத் திறன் இல்லாத கம்பு விதையால் நஷ்டம்: விவசாயிகள் கண்ணீர்....

திருச்சுழி:
முளைப்புத் திறன் இல்லாத கம்பு விதை 86 எம், 88 ரகங்களை விற்பனை செய்து விவசாயிகளை பெரும் நஷ்டத்தில் தள்ளிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பந்தல்குடி, எம்.ரெட்டியபட்டி, பரளச்சி, கல்லூரணி மற்றும் காரியாபட்டி பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 500 ஏக்கரில் கம்பு விதைத்தனர். விதைத்து பல நாட் கள் ஆகியும் கம்பு பயிர் முளைக்கவில்லை. அப்போது தான் விவசாயிகளுக்கு கம்பு விதைகள் விதைப்புத் திறனற்றவை என்பது தெரியவந்தது. இதையடுத்து, விதை வாங்கிய தனியார் விதை விற்பனை கடை உரிமையாளர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது பயோனியர் என்றநிறுவனம் கம்பு விதைகளை அனைத்துக் கடைகளுக்கும் விற்பனைக்கு கொடுத்தது தெரியவந்தது. பாதிப்பு குறித்து கம்பு பயிரிட்டராமாக்காள், ஜோதி, கோசலை ஆகிய விவசாயி
கள் கூறியதாவது: 

நல்ல முளைப்புத் திறனுடன் கூடிய கம்பு,நல்ல மகசூல் கிடைக்கும் என விற்பனையாளர்கள் கூறியதை நம்பி விதைத்தோம். தரையை விட்டு, வெளியே கூட பயிர் வரவில்லை. தனியார் கம்பெனி உரிமையாளரிடம் கேட்டதற்கு, உங்களுக்கு விதைத்து வளர்க்கத் தெரியவில்லை எனக் கூறினார். ஆய்வு செய்த வேளாண் மைத்துறை உயர் அதிகாரிகளோ, விதைத்த நாள் முதல் மழை பெய்ததால் பயிர்கள் முளைக்கவில்லை. அதற்கு விதை காரணமல்லஎன்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் வி.முருகன் கூறுகையில், தரமற்ற கம்பு விதைகளை விற்பனை செய்த தனியார் நிறுவனம், அதை விற்பனை செய்ய அனுமதித்த வேளாண்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முளைப்புத்திறன் அற்ற விதையை தடை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். அவர்
களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டுமென்றார்.

;