tamilnadu

img

எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் மா.தனசெல்வம் காலமானார்

சென்னை, செப். 12 - காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின், சென்னை கோட்டம்-2ன்  பொதுச் செயலாளர் மா.தன செல்வம் ஞாயிறன்று (செப்.11) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. எல்ஐசி-யில் 1989ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த போதே, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்திலும் உறுப்பினரானார். கிளைச் செயலாளர், கோட்ட பொரு ளாளர், கோட்டத் தலைவர், பொதுச் செயலாளர் என 33 ஆண்டுகளாக சங்கத்தின் முன்னணி ஊழியராக பணியாற்றினார். நடுத்தர வர்க்க தயக்கங்களை உடைத்தெறிந்த தொழிற் சங்கத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். சென்னை பழவந்தாங் கல் ரயில் நிலையம் அருகே, துரைராஜ் தெரு வில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்ச லிக்காக  வைக்கப்பட்டுள் ளது. அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமு வேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மாநிலக்குழு உறுப் பினர் கே.சுவாமிநாதன், தென்மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் டி. செந்தில்குமார், நிர்வாகிகள் ஆர்.கே.கோபிநாதன், ஜானகிராமன், கோட்ட நிர் வாகிகள் ரமேஷ் குமார் (சென்னை-1), தர்மலிங்கம் (சேலம்), சுரேஷ்குமார் (மதுரை), முத்துகுமாரசாமி (நெல்லை), சர்வமங்களா, தென்மண்டல பொது  இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், நாகராஜன் மற்றும் முன்னணித் தலை வர்கள், அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள் உள்ளி ட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு பள்ளிகளை பாதுகாப்போம்

இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசிய தலைவர்கள், “அமைப்பிற் குள் மாறுபட்ட கருத்து வந்தாலும் கடினமான வார்த்தைகளை வெளியிட மாட்டார். பொது வாழ் வில் உள்ளவர்களுக்கு பரந்தமனது தேவை என்பதற்கு அவரது வாழ்க் கையே உதாரணம். குடும்பத்தையும் இயக்கத் தையும் ஒன்றாக இணைத் தார். அரசு பள்ளிகளை பாதுகாக்க தொழிற்சங் கத்தை ஒருங்கிணைத் ததோடு, தனது மகளின் திருமணத்தில் கிடைத்த வெகுமதி அனைத்தையும் வழங்கினார். அவரின் வழி நின்று அரசு பள்ளிகளை பாதுகாக்கும் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்று சூளுரைத்தனர். அன்னாரது உடல் செவ்வாயன்று (செப்.13) காலை 8 மணிக்கு என்ஜிஓ  காலனி மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.