தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் மாணவிகள் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது. பாலியல் வன்முறைக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும் அதை சரியாக அமல்படுத்தா மல் உள்ளதால் அவற்றின் போதாமையாலும் இப்படியான குற்றங்கள் அதிகரித்து வரு கின்றன.
அதிகரிக்கும் குற்றம்
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை இந்தியாவில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு பெண் பாலியல் வன்கொ டுமை செய்யப்படுவதாகவும், 3 மணி நேரத்திற்கு ஒரு முறை 15 பெண் குழந்தை கள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படு கின்றனர் என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரு கின்றன என கூறுகிறது. 2020 ஆம் ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்க ளில் பாலியல் வன்முறை வழக்குகள் மட்டும் 27.046 விழுக்காடாகும். இதில் பாதிக்கப் ்பட்ட 25,498 பேர் சிறுமிகள் என்பதும் குறிப் ்பிடத்தக்கது. 2021ஆம் தினசரி 27 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.
வேலியே பயிரை மேய்கிறது...
இந்தியாவில் ஒவ்வொரு 155 நிமிடத் ்திற்கும் 16 வயதுக்குட்பட்ட ஒரு பெண் குழந்தை வன்புணர்வுக்கு ஆளாகிறது. 2007ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் நடத்திய குழந்தை கள் மீதான பாலியல் வன்முறை குறித்த முதல் ஆய்வின் மூலம் அதில் 100 குழந்தைக ளில் 53 குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்மறை நன்கு அறிந்த வர்களே ஈடுபடுகின்றனர். குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என 92.10 விழுக்காட்டினர். பாலியல் வன்முறை யில் ஈடுபடுவதாகவும் 8 விழுக்காட்டினர் அறிமுகம் இல்லாதவர்கள்.
ஆறாத ரணம்...
2012-இல் பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் போக்சோ இந்தியாவில் முதல் முறையாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தில் மரண தண்டனையும் சேர்க்கப்பட்டு சட்டம் கடுமையாக்கப் பட்டது. நமது அரசியல் சாசனம் நாம் கண்ணி யமாக வாழ்வதை அங்கீகரிக்கிறது. ஆனால் பாலியல் துன்புறுத்தல் அதை பறிக்கிறது. ஒரு மாணவி தான் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்பட்டதாக சொல்லும்போது பாதிக்கப்பட்ட மாணவியை குற்றவாளி யாக்கும் சூழலே நிலவுகிறது. ஒரு முறை ஒரு குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் அந்த வடு அந்த குழந்தை யின் வாழ்நாள் முழுவதும் மனதின் ஆறாத ரணமாக இருக்கும்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச்சட்டம் 2013 இயற்றப்பட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரி யும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனை கள் பற்றி புகார் தெரிவிக்க விசாகா குழு அமைக்க வேண்டும். 10 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் விசாகா குழு அமைக் கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விசாகா குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி ரகசிய விசாரணை நடத்த வேண்டும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்னே விசாரணையை துவங்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டுக்குச் சென்று விசாரணையை செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வரை விதிக்க முடியும். பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களிலும் முறையாக யூ.ஜி.சி. வழிகாட்டு அடிப்படை யில் அமைத்து அது மாணவர்களுக்கும் தெரி யும் வகையில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாண வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாலியல் சமத்துவக் கல்வி மற்றும் உளவியல் ஆலோசனையும் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாநில சிறப்பு மாநாடு நடை பெறுகிறது. பாலியல் கொடுமைகளுக்கு எதிராக களம் காண நாம் அணிதிரள்வோம். களம் காணுவோம்.
கட்டுரையாளர்:
மாநிலத்தலைவர்
இந்திய மாணவர் சங்கம்