tamilnadu

img

மோடி அரசின் உருவபொம்மையை எரித்து இடதுசாரிகள் போராட்டம்...

மதுரை:
தில்லியில் போராடும் விவசாயிகள் கோரிக்கையான புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்துவருகிறது. மத்திய அரசுன் பிடிவாதத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா, உருவபொம்மை எரிப்பு போராட்டங்களை இடதுசாரிக் கட்சிகள் நடத்தி வருகின்றன.

அதனொருபகுதியாக மதுரை அவனியாபுரம் தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுஉறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சொ.பாண்டியன், தாலுகா செயலாளர் எம்.சேதுராமு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.பிச்சைராஜன், தனபால், வீரபத்திரன், கருப்பசாமி, சிபிஐ பாலகிருஷ்ணன், வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் தபால் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாவட்டகுழு உறுப்பினர் க.பிரேமலதா, ஒன்றியச் செயலாளர் ஜி.முத்துராமன், கப்பலூர் ஊராட்சித் தலைவர் கண்ணன், சிபிஐ ஓ.சுப்புக்காளை உள் ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்,கள்ளிக்குடி கனரா வங்கி முன்பு மறியல் செய்தமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே,அரவிந்தன், ஒன்றியச்செயலாளர் எஸ்.விஸ்வநாதன், சிபிஐ எஸ்.சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்,அகில இந்திய விவசாயிகள் ஒருகிணைப்பு மற்றும் கூட்டமைப்ப்பினர் யா.ஒத்தக்கடையில் மோடி அரசின் உருவபொம்மையை எரித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் டி.இரவீந்தரன், அய்யாவு, இராஜேஸ்வரன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் கே.சேகர், பொன்னையா, சிபிஐமாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், ஜி.சந்தானம், பூமிநாதன், மதிமுக ஊராட்சி செயலாளர் காளிமுத்து, மக்கள் அதிகாரம் சரவணன், நடராஜன், மனித நேய மக்கள் கட்சி பிலால் உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர்
சிவகாசி பேங்க் ஆப் பரோடா வங்கி முன்பு மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.என்.தேவா, சி.முருகேசன், ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர் கே.முருகன்,வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் தீபா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், சிபிஐ சமுத்திரம், ஜீவா, இக்பால், உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.காரியாபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், தாலுகா செயலாளர் ஏ.அம்மாசி, சிபிஐ வி.பாலமுருகன், வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.திருச்சுழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி.முருகன், ஆர்.சந்திரமோகன், ஒன்றியச் செயலாளர் பி.அன்புச்செல்வன், சிபிஐ செந்தில்குமார், நீதிராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.வெம்பக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எம்.முனியசாமி, சிஐடியு தலைவர் ஆர்.சோமசுந்தரம். சிபிஐ நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். திருவில்லிபுத்தூரில் இடதுசாரி கட்சியினர் பேரணி நடத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பு மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சசிகுமார், சிபிஐ வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற மறியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன் துவக்கி வைத்தார். சிபிஐ சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ராமசாமி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அழகிரிசாமி ஆகியோர்வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து மோடி அரசின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் எரித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் திருமலை, ஜோதிலட்சுமி, நகர்செயலாளர் ஜெயக்குமார், சிபிஐ மூர்த்தி உட்பட ஏராளமானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.