ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்
மதுரை, ஏப்.19- சென்னை அலுவலகப் பணிக்கு எதற்கு இந்தி மொழி அறிவு? என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன், சட்ட மீறலை கைவிட்டு, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய அமைச்ச ருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர், ஒன்றிய சமூக நீதி-அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமாருக்கு அனுப்பி யுள்ள கடிதம் வருமாறு: சென்னை முட்டுக்காடுவில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகாரமளித்தல் தேசிய மையம் ஏப்ரல் 13 அன்று பணி நியமன அறிவிக்கை ஒன்றை விடுத் துள்ளது. ஒரே ஒரு “உதவி தேர்வு கட்டுப்பாட்டாளர்” பதவிக்கான “வாக் இன்” நேர்காணல்/ தேர்வுக்கான அறி விப்பு அது. எதிர் வரும் 22.04.2022 அன்று தேர்வு நடைபெறவுள்ளது.
அந்த அறிவிக்கையில் தேர்வுக் கான தகுதிகளில் ஒன்றாக “புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்தி அறிவு” வேண்டுமென குறிப்பிடப் பட்டுள்ளது. இது அலுவல் மொழிச் சட்ட விதி கள் 1976 -ஐ மீறுவது ஆகும். மண்ட லம் 3 இல் இடம்பெற்றுள்ள மாநிலங்க ளில் அலுவல் தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்று அவ்விதி கள் தெளிவாக கூறுகிறது. ஒன்றிய அரசிடமிருந்து வரும் தகவல்கள் ஆங் கிலத்தில் இருக்க வேண்டுமென்றும், மண்டலம் 3 இல் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்து செல்லும் கடிதங்களும் ஆங்கிலம் அல்லது இந்தியில் (இந்தி மட்டுமல்ல) இருக்க லாமென்றும் தெளிவாக உள்ளது. எனவே இந்தி மொழி அறிவை தேர்வுக்கான தகுதியாக இந்தியா முழுவதும் எந்திரகதியாக விரிவு படுத்த, வலியுறுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்பட்டமான இந்தி திணிப்பு இரண்டாவதாக, இந்த நிபந்தனை தமிழ்நாட்டில் இருந்து வரும் தேர்வர் களுக்கு பாதிப்பை உருவாக்குவது ஆகும்.
இது அப்பட்டமான இந்தி திணிப்பே ஆகும். எனவே தாங்கள் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி அதிகார மளித்தல் தேசிய மையம், இந்தி மொழி அறிவை மேற்கண்ட தேர்வுக்கான தகு தியாக வலியுறுத்தக் கூடாது என்றும், இந்த நிபந்தனையை அகற்றி புதிய அறிவிக்கை வெளியிட அறிவுறுத்து மாறு அமைச்சரை வலியுறுத்தி உள்ளேன். சற்று கண்ணயர்ந்தாலும் இடுக்கு கள் வழியாக இந்தியை நுழைத்து விடு வார்கள். ஒரு காலியிடம், அதுவும் 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான பணி... இருந்தாலும் இந்தியைத் திணிக்கிறார்கள் எனில் அலுவல் அல்ல, அவர்களின் மொழி அரசி யலே காரணம். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.