சென்னை, ஜூலை 16- தேர்தலில் பாஜகவை வீழ்த்தினால் போதாது, அதன் சித்தாந்தத்தை தோற் கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் அறை கூவல் விடுத்துள்ளார். கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா பிறந்தநாள் விழா வும், தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி யும் சனிக்கிழமை (ஜூலை 15) பெரம் பூரில் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்தீஷ் குமார் தலைமை தாங்கினார். இதில் 860 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை ரூ.12 லட்சத்து 89 ஆயிரத்து 500-ஐ பெற்றுக்கொண்டு மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகை யில், சிறுபான்மை மக்களுக்கு பக்க பலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது எனக் கூறி செஞ்சியில் இஸ்லாமியர்கள் 25 சந்தாக்களை வழங்கினார்கள்.இப்படி கட்சி வித்தியாசமில்லாமல், மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் தீக்கதிர் சந்தா வழங்கியுள்ளனர். கூடுதல் முயற்சி எடுத் தால் இன்னும் அதிக சந்தாதாரர்களை சேர்க்க முடியும். அதன்மூலம் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களிடம் கட்சியின் கருத்துக்களை எடுத்துச்செல்ல முடி யும் என்றார்.
விலைவாசி உயர்வு
தமிழ்நாட்டில் அரசியல் கட்சி களில் தினசரி பத்திரிகை நடத்துவது திமுக, அதிமுக, சிபிஎம் ஆகிய மூன்று கட்சிகள்தான். எவ்வளவு பெரிய அர சியல் கட்சியாக இருந்தாலும் தினசரி பத்திரிகை நடத்த முடியவில்லை. காரணம் மோடி அரசின் தவறான பொரு ளாதாரக் கொள்கையினால் பத்திரி கைக்கு தேவையான காகிதம், மை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டன. இன்றைக்கு அனைத்து அச்சு ஊடகங்களுமே மூடும் நிலைக்கு தள்ள ப்பட்டு விட்டன. அனைத்து பத்திரி கைகளும் பக்கங்களை குறைத்து விட்டன. சில ஆண்டுகளில் அச்சு ஊடகங்கள் ஆன்லைன் பத்திரிகை களாக மாற வாய்ப்புள்ளது. தினசரி பத்திரிகைகள் கடுமையான நெருக் கடியை சந்தித்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
பதற்றத்தில் பாஜக
பாஜக தன்னுடைய தேர்தல் ஆதாய த்திற்காக அமைதியாக இருந்த மணிப்பூரில் கலவரத்தை உருவாக்கி, அந்த மாநிலத்தையே கலவர பூமியாக மாற்றிவிட்டனர். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் கூட இப்படிப்பட்ட கல வரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்யும். இந்தியாவில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் ஒன்றாக கூடி பாட்னாவில் ஆலோசனை நடத்திய பிறகு, 2ஆவது கூட்டத்திற்கு தேதி நிர்ணயிக்கப்பட்ட பிறகு பாஜகவிற்கு அச்சமும், பதற்ற மும் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பது தான். அதனால்தான் வரும் 18ஆம் தேதி தில்லியில் கூட்டணிக் கட்சிக் கூட்ட த்தை பாஜக கூட்டுகிறது.
ஆபத்தான பொது சிவில் சட்டம்
முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஒன்றிய ஆட்சி யாளர்கள் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரத் துடிக்கிறார்கள். இந்தி யாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த வர்கள், பல்வேறு பழக்கவழக்கங் களை கொண்டவர்கள். இந்துக்களுக் குள்ளேயே ஒரே மாதிரியான திருமண முறை இல்லை. மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடு இன்றைக்கும் நீடித்துக் கொண்டிருக்கிறது. அசாமில் ஒரு குடும்பத்தில் கடைசியாக பிறக்கும் குழந்தைக்குத்தான் சொத்து என்ற நடை முறை உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்க ளுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி ஒரே மாதிரி யான சட்டத்தை கொண்டு வர முடியும் எனக் கேள்வி எழுப்பினார். இந்த சட்டம் அமலானால் இந்தியா ஒரு மதக் கலவரத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே இதுகுறித்து மக்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மிகப்பெரிய கடமை நம்முன் உள்ளது என்றார்.
சித்தாந்ததை வீழ்த்த வேண்டும்
பாஜக ஒருமுறை தோல்வி அடைந்து விட்டால், அதனுடைய அடிப் படை சித்தாந்தம் தோற்றுவிட்டதாகக் கருத முடியாது. அரசியல் களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தலாம். அது மட்டும் போதுமா? கருத்தியல் களத்தில், பொருளா தாரக் கொள்கையில், இந்துத்துவா கொள்கையில், மதவெறிக் கொள்கை யில், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் போன்ற வற்றில் அவர்களை வீழ்த்த வேண்டும். உலகமய தாராளமயக் கொள்கை களை உறுதியாக எதிர்ப்பதும், அதற்கு மாற்றுத் திட்டத்தை முன் வைத்திருப் பதும் சிபிஎம் மட்டும்தான். தற்போது நிலவும் நுகர்வு கலாச் சாரம், மத வெறி அரசியல், தொழிற் சங்க, தொழிலாளர்கள் உரிமை பறிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற பாஜகவின் மோசமான நடவடிக்கை களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய தேவை நம்முன் உள்ளது. அதற்கு ஆயுதமாக இருக்கக் கூடிய தீக்கதிர் நாளேட்டை விரிவாக மக்களி டம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோரும் பேசினர். முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப் பினர் அ.விஜயகுமார் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கதிர்வேல் நன்றி கூறினார்.