tamilnadu

எஸ்.துரைராஜ் மறைவு: கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி

சென்னை, ஜன. 17 - இதழியல் பணியை எப்போதும் மக்க ளுக்காகவே பயன்படுத்தியவர் எஸ்.துரைராஜ் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் உடல்நலக் குறைவால் ஜன.15 அன்று கால மானார். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரி வித்து சுட்டுரையில் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பி.டி.ஐ செய்தி நிறுவனத்திலும், லின்க்,  தி இந்து மற்றும் ஃபிரண்ட்லைன் இதழ்களி லும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கையாளராக இயங்கி, ஓய்வுபெற்ற மூத்த இதழியலாளர் எஸ்.துரைராஜ், உடல் நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனையுற்றேன். அவர் பணி யில் இருந்த காலத்தில், அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார். மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், அதில் மார்க்சிஸ்ட் கட்சி  மேற்கொண்ட தலையீடுகள் குறித்தும் கேட்டு  விவாதிப்பார். இடதுசாரி, முற்போக்கு சிந்தனையும், மனித நேயமும் கொண்ட சிறந்த மனிதராக செயல்பட்ட துரைராஜ், இதழியல் பணியை எப்போதும் மக்களுக்காகவே பயன் படுத்தினார். பத்திரிக்கையாளர் அமைப்புக ளில் சிறப்பாக செயல்பட்டார். அவரது மறைவு  இதழியல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார், உற வினர்கள், ஊடகத் துறை நண்பர்கள் என அனைவருக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.