நகைக்கடை, சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து திருட்டு
மாமல்லபுரம், அக்.27- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த குழிப்பான்தண்டலம் பகுதியில் மோகன்லால் நடத்தி வரும் அடகு கடை மற்றும் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஞாயிறன்று (அக். 25) நள்ளிரவு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. முழு வெள்ளை துணியுடன் வந்த மர்ம நபர் அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று லாக்கரை உடைக்க முயன்றார். அது முடியாததால், அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.10ஆயிரத்தை திருடி சென்றுள்ளார்.புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை வைத்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணலி எம்.ஜி.ஆர். நகர் 1ஆவது தெருவில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.மழைக்காலத்தில் குழிகளில் தண்ணீர் தேங்கி, இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. முதியவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சென்னை மாநகராட்சி உடனடியாக சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கடும் எதிர்பார்ப்போடு கோரிக்கை விடுத்துள்ளனர்.
