tamilnadu

img

மக்கள் சீனம் 75 -

சீன மக்கள் குடியரசு தனது 75வது ஆண்டை வெற்றிகரமாக எட்டியுள்ளது. அக்டோபர் 1 அன்று அந்நாடு முழுதும் எழுச்சிமிகு உற்சாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சி ஏற்பட்டு, சோசலிச ஆட்சி மலர்ந்ததன் 75ஆம் ஆண்டு தினத்தையொட்டி தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் தேசியக் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. அதில் 1,20,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் - நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டது.

கடந்த 75 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி

  1.  உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக உயர்வு
  2.  சராசரி ஆண்டு ஜிடிபி வளர்ச்சி 9% 
  3.  தனிநபர் வருமானம் 76 மடங்கு அதிகரிப்பு
  4.  சராசரி ஆயுட்காலம் 35 முதல் 78 ஆக உயர்வு
  5.  தீவிர வறுமை ஒழிப்பு
  6. ள்கட்டமைப்பு - தொழில்நுட்ப முன்னேற்றங்கள்
  7.  உலகின் மிகப்பெரிய அதிவேக ரயில்வே மற்றும் விரைவுச்சாலைக் கட்டமைப்பு
  8.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
  9.  கடுமையான காற்று மாசுபாடு 83% குறைவு
  10.  சுற்றுச்சூழல் குறித்த பொதுமக்கள் திருப்தி 91%க்கும் மேல் உயர்வு

எதிர்கால இலக்குகள்

  1.  2035க்குள் சோசலிச நவீனமயமாக்கல்
  2.  2049க்குள் அனைத்து அம்சங்களிலும் சிறந்த நவீன சோசலிச நாடாக மாறுதல்மேற்கண்ட முன்னேற்றங்களுடன் சில சவால்களையும் சீனா எதிர்கொள்கிறது.
  3.  தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி
  4.  முக்கிய தொழில்நுட்பங்களில் உள்ள தடைகளை சமாளித்தல்
  5.  மக்கள்தொகை முதிர்ச்சி 
  6.  ஏற்றத்தாழ்வுகளை மேலும் குறைத்தல்

75ஆம் ஆண்டு விழா நிகழ்வில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எதிர்காலத்தில் உள்ள சவால்கள் குறித்து எச்சரித்தாலும், சீன மக்கள் மேலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்துவார்கள் என்றும், மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலும் பங்களிப்பு களைச் செய்வார்கள் என்றும் உறுதியளித்தார். 300 சீர்திருத்த நடவடிக்கைகள்; செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல், உயிரி மருத்துவம் போன்ற துறைகளில் 1 டிரில்லியன்  டாலர் மதிப்பிலான துணைத் தொழில்கள் உருவாக்கம் உள்ளிட்ட எதிர்காலத் திட்டத்துடன்,  மேலாதிக்கம், காலனித்துவம் தவிர்ப்பு; உலக அமைதிக்கான பங்களிப்பு; சீன பாணி நவீன சோசலிசத்தை நோக்கிய பயணம் ஆகிய உறுதிகளோடு மக்கள் சீனம் முன்னேறும் என்றும் ஜின்பிங் தெரிவித்தார்.

“சீனாவின் பொருளாதார மாற்றம், தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் சமூக வளர்ச்சி உலகிற்கு நம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது.” டில்மா ரூசெஃப், முன்னாள் பிரேசில் ஜனாதிபதி

“சீனா உலகிற்கான அமைதியின் இயந்திர மாக மாறி வருகிறது.” ஜெசி இசெக்ஸ்  வான் ப்ஃபெட்டன்,  கிழக்கு-மேற்கு உறவுகள் ஆய்வு மையத் தலைவர்.

“சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மீண்டும் வசந்த காலம் வந்துள்ளது. குவாண்டம் அடிப்படை ஆராய்ச்சியில் சீனா உலகத் தரம் வாய்ந்த நிலையை அடைந்துள்ளது.” சுவே கிகுன், சீன இயற்பியலாளர்