tamilnadu

உலகச் செய்திகள்

அணுசக்தியை ஈரான் பயன்படுத்துவது தொடர் பான பேச்சுவார்த்தை ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இரண்டு ஈரானிய நிறுவனங்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது புதிய தடைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் போடப்பட்ட உடன்பாட்டிலிருந்து தன்னிச்சையாக 2018ஆம் ஆண்டில் அமெரிக்கா வெளி யேறியது. உடன்பாட்டை மீண்டும் புதுப்பிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

சிரியாவைச் சேர்ந்த ஒருவருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்துக் கொடுத்ததற்காக அமெரிக்க தூதரக அதி காரி ஒருவரை துருக்கி காவல்துறையினர் கைது செய்துள்ள னர். லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அவர் பணி யாற்றிக் கொண்டிருக்கிறார். லெபனானில் பணியாற்றுவ தால் அவரை விசாரித்து, வழக்குப் பதிவு செய்ய துருக்கியில் எந்தவிதத் தடையுமில்லை என்றும், தூதரக அதிகாரி என்பது லெபனானில்தான் செல்லுபடியாகும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் பத்தாயி ரம் டாலர் லஞ்சமாக வாங்கியது அம்பலமாயிருக்கிறது.

கோவிட் 19 தொற்றுக்கு எதிராகப் பயன் படுத்தப்படும் மருந்துகள் பற்றிய ஆய்வில் கியூபா பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இங்கி ருந்து தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படு கின்றன. இந்நிலையில் மூக்கு வழியாகச் செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து ஆய்வு நிறைவுக் கட்டத்தில் இருக்கிறது. தொற்று பரவுவதைத் தடுப்பது மற்றும் குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருந்து தரும் என்று கியூபாவின் பயோகியூபாபார்மா என்ற நிறுவனத் தின் தலைவர் எர்வர்டோ மார்டினஸ் தெரிவித்துள்ளார்.

;