tamilnadu

img

மதுரை நம்பியின் நூலுக்கு சர்வதேச அளவிலான பரிசு

மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்கத்தின் மதுரை  மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்  பினர், தமுஎகச அரசரடி கிளைச் செயலாளர் மதுரை நம்பி எழு திய “சிறையில் ஒளிரும் நட்சத்தி ரங்கள்” நூலுக்கு சர்வதேச அளவி லான பரிசு கிடைத்துள்ளது. இது குறித்து, தமுஎகச மதுரை மாநகர்  மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா, மாவட் டத் தலைவர் இளங்கோ கார்மேகம்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மலேசியாவில் 11 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23 இல் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு 136 நாடுகளிலிருந்து  63 மொழிகள் பேசும் அறிஞர் பெரு மக்கள், தமிழறிஞர்கள், பிற மொழி  அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவிய லாளர்கள், எழுத்தாளர்கள் அழைக் கப்பட உள்ளார்கள். இதனை ஒட்டித் தமிழில் வெளிவந்த சிறந்த  கவிதைகள், கட்டுரைகள், கதைகள்  63 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிட உள்ளனர். இதனை  ஒட்டி இந்தியாவில் வெளிவந்த சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு,  கட்டுரைத் தொகுப்பு,கதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு  நூலுக்கு எனத் தனித்தனியாக பரிசு கள் வழங்கப்படும் என அறிவித்தி ருந்தனர். அந்தத் தேர்வுக்கு உலகம் முழு வதிலும் இருந்து படைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில்  சிறந்த கட்டுரைத் தொகுப்பாக தமிழ்  நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலை ஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர், தமுஎகச அரசரடி கிளைச் செயலா ளர் மதுரை நம்பி எழுதிய “சிறையில்  ஒளிரும் நட்சத்திரங்கள்” நூல் தேர்வு  செய்யப்பட்டது. சிறைத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணி யாற்றி ஓய்வு பெற்ற தோழர் மதுரை  நம்பி, சிறையில் சந்தித்த மனிதர் களின் வாழ்வியல் சார்ந்த அனு பவங்களைச் சுவாரசியமான நடை யில், உண்மை ஒளியோடும்,

மார்க்சி யப் பார்வையோடும், மனிதாபி மான உணர்வோடும் கட்டுரைகளாக  வடித்திருந்த நூல் அது. கட்டுரை  நூல் என்றாலும், ஒரு நாவல் போல  சுவாரசியமான நடையில் அமைந்த  நூல் அது. உண்மை அனுபவங்க ளின் தொகுப்பாக வெளிவந்த இந்த  நூலை டிஸ்கவரி புக் பேலஸ் வெளி யிட்டது. இந்த நூலின் சம்பவங்க ளைப் படித்த பல சினிமா இயக்கு நர்களும் அவற்றைப் படமாக்க ஏற்கெனவே மதுரை நம்பியிடம் அணுகியுள்ளனர். அத்தனை சுவா ரசியமும், அதேநேரம் நேர்மையும், உண்மைத் தன்மையும் உள்ள இந்  நூல் சர்வதேச அளவிலான வாசிப்  பாளர்கள் எவரையும் ஈர்க்கும் தன்மையுடையது. அதுபோலவே சிறந்த சிறுகதை நூலாக, ஆசு எழுதிய “செல்லி மற் றும் பிற கதைகள்” நூல் தேர்வு செய்யப்பட்டது. இந்த நூல்கள்  ஒவ்வொன்றுக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்  ளது. மலேசியாவில் ஜூலை 21-23  இல் நடைபெற உள்ள 11 ஆவது உல கத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இந்தப் பரிசு வழங்கிக் கௌரவிக் கப்படும். சர்வதேச அளவில் விருது  பெற்ற மதுரை நம்பி அவர்களுக்கு  தமுஎகசவின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலச் செய லாளர் ஆதவன் தீட்சண்யா, மதுரை  மாநகர் மாவட்டச் செயலாளர் ஸ்ரீரசா, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் இளங்கோ கார்மேகம், பொருளாளர் மானிடன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.

;