tamilnadu

கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் 0.4 சதவீதம் பேருக்கு எதிர்விளைவு

புதுதில்லி,டிச.8-  நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியதால் 0.4 சதவீதம் பேருக்கு  எதிர்விளைவுகள் ஏற்பட்டதாக ஒன்றிய சுகாதா ரத்துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.  இதுதொடர்பாக மாநி லங்களவையில்  உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித் துள்ளது. அதில், தடுப்பூசி செலுத்த தொடங்கிய நாள் முதல் கடந்த 30 ஆம் தேதி வரை, நாடு முழுவதும் 123.25 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்க ளில் 49,819 பேருக்கு ( 0.4 சத வீதம்)  எதிர் விளைவு ஏற்பட் டுள்ளது. எதிர் விளைவு அனைத்தும் தடுப்பூசி செலுத் தியதால் ஏற்பட்டவை என்று கூற முடியாது.

மொத்த பாதி ப்புகளில் 47 ஆயிரத்து 691  லேசானவை, 163 தீவிரமான வை, ஆயிரத்து 965 மோசமா னவை ஆகும். கொரோனா  தடுப்பூசி செலுத்திய பிறகு 946 பேர் உயிரிழந்துள் ளனர். 1,019 பேர் தடுப்பூசி செலுத்திய பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர்.  89 மர ணங்களும் எவ்வாறு நிகழ்ந்த வை என பிரிக்கப்பட்டி ருக்கின்றன. அதாவது, 4 மர ணங்கள் தடுப்பூசி சார்ந்த வை, 58 தற்செயலானவை, 16 வரையறுக்க முடியாதவை மற்றும் 11 வகைப்படுத்த முடி யாதவை என்று சுகாதா ரத்துறை அமைச்சகம் அளித் துள்ள பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.