tamilnadu

ஆப்கனுக்கு 1.6 மெட்ரிக் டன் மருந்து பொருள்களை அனுப்பிய இந்தியா

காபூல், டிச.12-  ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மருந்து பொருள்களை அனுப்பி இந்தியா உதவியுள்ளது.  ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதன்பின்னர் முதன்முறையாக மனிதாபி மான அடிப்படையிலான உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. கொரோனா பரவ கூடிய கடினமான சூழலில் ஆப்கன் மக்க ளுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்த உதவியை இந்தியா செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து தில்லிக்கு 10 இந்தியர்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.  அந்த விமானத்திலேயே இந்த மருத்துவ பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.  இதுதவிர, ஆப்கானிஸ்தா னுக்கு 50 ஆயிரம் டன் கோதுமை மற்றும் மருந்துகள் அனுப்பப் படும் என்று இந்தியா முன்பே தெரிவித்தது.

;