tamilnadu

சின்னவெங்காயம் விளைச்சல் பாதிப்பு

தே.கல்லுப்பட்டி:
பேரையூர் தாலுகாவில் சந்தையூர்,பாறைப்பட்டி, கீழப்பட்டி, சிலைமலைபட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்த மழையால் சின்ன வெங்காயம் திருகல் நோயால் பாதிக் கப்பட்டுள்ளது. அதாவது செடியின் நுனிப்பகுதி கருகி, காய்ந்து அப்படியே சாய்ந்து விடும். இதனால் வெங்காயத்தை பயன் படுத்த முடியாத நிலை உள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தோட்டக்கலைத்துறையினர் புதனன்று பாதிக்கப்பட்ட வெங்காயச் செடிகளை பார்வையிட்டுள்ளனர். வெங்காய விவசாயத்திற்கு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை செலவழிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, வெங்காயத்திற்கு பிப்ரவரி- 2021 வரை காப்பீடு செய்யலாம். காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.1,817. பாதிக்கப்பட்ட வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ.36, 328 கிடைக்கும். தற்போது திருகல் நோய் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளும் காப்பீடு செய்யலாம் என்றார்.

;