tamilnadu

img

அனைவருக்கும் வீடு திட்டம்: தமிழ்நாட்டுக்கு விருது

சென்னை, அக்.20- ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம்  செயல்படுத்தப்படும் அனைவ ருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக  செயல்பட்டமைக்கு தேசிய அளவில்  3ஆம் இடம் பிடித்த தமிழ் நாட்டிற்கு,  குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அக்.19 அன்று நடைபெற்ற விழா வில் பிரதமர் நரேந்திர மோடியிடம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் விருதை பெற்றார். மதுரைக்கு விருது “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும்  150 நாட்கள் சவால்கள்” என்ற அடிப்படையில், மாநிலம், மாநக ராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக ளுக்கான விருதுகளும், சிறப்புப்  பிரிவு விருதுகளும், பயனாளிகளுக் கான விருதுகள் என மூன்று பிரிவு களில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில்  தமிழகம் 3 ஆவது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3 ஆவது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூ ராட்சிக்கு 5 ஆவது இடமும் பிடித்து  விருதுகள் பெற்றுள்ளன.

;