காசியாபாத்,மார்ச் 6- மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்) தோற்றுவிக்கப் பட்டதன் 53வது ஆண்டு தினத்தை முன்னிட்டு காசியாபாத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில்துறை பாது காப்புப் படை போன்ற அரசாங்கப் பாதுகாப்பு முகமை கள் மட்டும் பணியாற்ற முடியாது. படிப்படியாக இந்த பணியை தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடியும். பல்வேறு தனியார் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை பிரிவுகளுக்கு பயனுள்ள பாதுகாப்பை வழங்குவதற்கு தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையும் இணைந்து பணியாற்ற முடியும். தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து , மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை பரிசீலிக்க வேண்டும். நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள தொழில்துறை பிரிவுகளுக்கு அதி கரித்து வரும் ட்ரோன் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்த லைக் கருத்தில் கொண்டு, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தைத் தயாரிக்க வேண்டும். இதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவற்றிற்கு சி.ஐ.எஸ்.எப். ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.