சண்டை மற்றும் சச்சரவு எதுவும் இல்லாமல் தனது நாடு பாதுகாப்பைத் தேடுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ரஷ்யா வுடன் அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியான நேட்டோ மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ள புடின், “போர் செய்வ தற்கான எந்தவித நோக்கமும் ரஷ்யாவுக்கு இல்லை. ஆனால், கிழக்குத் திசையில் நேட்டோ கூட்டணி விரிவடைந்தால் தனது பாதுகாப்பை உத்தரவா தப்படுத்தும் பணியில் ரஷ்யா இறங்கும்” என்றார்.
ஒமைக்ரான் வைரஸ் 57 நாடுகளில் பரவியுள் ளது என்றும், மறுதொற்றுக்கான வாய்ப்புகள் ஒமைக்ரானில் அதிகமாக இருக்கிறது என்றும் உலக சுகாதாரக் கழகம் எச்சரித்துள்ளது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளின் எண்ணிக்கை பெரும் அளவில் இருக்கும் என்று கூறியுள்ள உலக சுகா தாரக் கழகம், இப்போதும் கூட பரிசோதனைக்கு உட் படுத்தப்படுபவர்களில் 99 விழுக்காட்டினர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் 20 வங்கதேச பல்கலைக் கழக மாணவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் அப்ரார் பஹத் என்ற 21 வயது மாணவரைப் படு கொலை செய்ததற்காக இந்த தண்டனையை வழங்கியிருக்கிறார்கள். சமூக வலைதளத்தில் அரசின் முடிவை விமர்சனம் செய்தார் என்பதற்காக அப்ரார் பஹத் படுகொலை செய்யப்பட்டார்.