திருநெல்வேலி, அக்.25- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான உபகரணங்களை வழங்கினார். பின்னர் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறுகையில், கூடங்குளம் அணு உலை அணுக்கழிவு களை அங்கேயே சேகரித்து வைத்து ள்ளதால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த அணுக்கழிவுகளை ராஜஸ்தான் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லலாம். மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பின ராக ஏபிவிபி மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவர் சிண்டிகேட் உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி மாணவர்களுடன் செல்பி எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொது நலனில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பும் மசோதாக்கள் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்பது சட்டமன்ற விதி. ஆனால் ஆளுநர் சட்டமன்ற மரபுப்படியும் சட்ட விதிப்படியும் செயல்படுவதில்லை. அவர் ஆர்எஸ்எஸ் விதிப்படி செயல் படுகிறார். சட்டப்பேரவையில் நிறை வேற்றப்படும் எந்த தீர்மானத்திற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பது கிடை யாது. தமிழ்த்தாய் வாழ்த்து விவ காரத்தில் தூர்தர்ஷன் இயக்குநர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக ஆளுநரை திருப்திப்படுத்து வதற்காக தூர்தர்ஷன் இயக்குநர் தமிழ்த்தாய் வாழ்த்தில் இரண்டு வரி களை தவிர்த்து விட்டு படித்திருக்க லாம். யாரையோ திருப்திப் படுத்துவதற்காக என்னை குறிப்பிட்டு தவறான தகவலை பகிர்ந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இயக்குநர் எனக்கு மன்னிப்பு கடிதம் அளித்தார் என்று தெரிவித்தார்.