tamilnadu

img

தோழர் ஜீவானந்தம் பேரனுக்கு அரசுப் பணி

பொதுவுடைமை இயக்கத்தின் சிந்தனையா ளர் தோழர் ஜீவானந்தத்தின் பேரன் ம.ஜீவானந்த்க்கு (மாற்றுத் திறனாளி) தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வி யியல் பணிகள் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். தங்களது கோரிக்கையை ஏற்று அரசு வேலை  வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, பாடநூல் நிறுவனத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட அனைவருக்கும்  ஜீவானந்தம் குடும்பத்தினர்  நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.