விருதுநகர், அக்.13- மாவட்டத் தலைநகரான விருது நகருக்குள் தொலைதூரப் பேருந்து களும், புறநகர் பேருந்துகளும் வந்து செல்வதில்லை. இதனால் குடும்பத்துடன் வெளியூர் சென்று வரும் பயணிகள் இரவு நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். எனவே, விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை செயல் படுத்தி அனைத்து பேருந்துகளை யும் அங்கு வந்து செல்ல தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகருக்குள் கடுமை யான போக்குவரத்து நெருக்கடி யும், பல்வேறு விபத்துகளும் ஏற் பட்டன. இதன் காரணமாக நகரின் எல்லையில் உள்ள சாத்தூர் சாலை யில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அப்பணிகள் வேகமாக நிறை வடைந்து, விருதுநகர் பேருந்து நிலையமானது, கடந்த 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இப்பேருந்து நிலையம் துவக்கப்பட்ட காலத்தில் புறநகர் பேருந்துகள் அங்கிருந் தும், நகரப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தன.
முட்டுக்கட்டை
இந்தநிலையில், பல்வேறு கார ணங்களால் இப் பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படுவதில் பல் வேறு முட்டுக்கட்டைகள் போடப் பட்டன. அதேவேளை மாவட்ட நிர்வாகமானது, அக்காலகட்டத் தில் உறுதியான நிலைபாட்டை எடுக்கவில்லையெனவும் பொது மக்கள் தற்போது வரை குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, கடந்த 2011-12 இல் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக பாலாஜி பொறுப் பேற்ற போது, பைபாஸ் ரைடர் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றன. மேலும் விருதுநகர்-சென்னை, விருதுநகர்-பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக் கும் பேருந்து சேவை புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கப் பட்டது. இதனால் விருதுநகர் பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்த னர். அதன்பிறகு, படிப்படியாக அனைத்து பேருந்துகள் வருகை யும் நிறுத்தப்பட்டது. இதன் காரண மாக புதிய பேருந்து நிலையமா னது, காட்சிப் பொருளாக மாறி யது.
மார்க்கெட்டாக மாறிய பேருந்து நிலையம்
இந்தநிலையில், கடந்த 2020 இல் கொரோனா பெருந்தொற்று பர வலையொட்டி காய்கறி சந்தை யாக புதிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. அப்போது, ஏராள மான பொது மக்கள் மற்றும் சிறு கடை வியாபாரிகள் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றனர். கொரோனா கட்டுக்குள் வந்த வுடன் மீண்டும் பழைய நிலைக்கே சென்றது. தற்போது, புதிய பேருந்து நிலையத்தை நடைபயிற்சி செய்தி டும் இடமாக சில முதியோர்களும், மேலும் சிலர் பொழுது போக்கு மையமாகவும் பயன்படுத்தி வரு கின்றனர்.
பயணிகள் அவதி
அதேவேளை, இரவு நேரங்க ளில் திருநெல்வேலி, கோவில்பட்டி மற்றும் நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து விருதுநகர் வரும் பயணிகள் பெரும் சிர மத்தை சந்திக்கின்றனர். “மாவட்டத் தலைநகருக்குள் பேருந்து செல் லாது“ என்றே அரசு பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்களே கூறுவ தோடு, பயணிகளை பேருந்தில் பய ணிக்க அனுமதிப்பதில்லை. இத னால், இரவு முடியும் வரை அப்பய ணிகள் பேருந்து நிலையங்களி லேயே காத்துக்கிடக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. அருகாமையில் உள்ள கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு மேல் விருதுநகர் வரு வதற்கு அரசுப் பேருந்து சேவை கிடையாது. அங்குள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று பைபாஸ் ரைடர் பேருந்தில் ஏறி னால், விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் இறக்கி விடப்படுவார்கள். அங்கி ருந்து நடந்தோ அல்லது கூடுதல் பணம் செலவு செய்து ஆட்டோக்க ளிலோ தான் விருதுநகருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகளுக்காக பயணி களா? அல்லது பயணிகளுக்காக அரசுப் பேருந்துகளா? என விருது நகரில் வசிக்கும் ஒவ்வொரு பொது மக்களும் தற்போது கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர். ஆனால், விருதுநகர் மாவட்டத் தில் உள்ள அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையங்கள் தற்போது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கின்றன எனவும் பொது மக்கள் தெரி விக்கின்றனர். ஆனால், விருதுநக ரில் புதிய பேருந்து நிலையம் திறக் கப்பட்டு 30 வருடங்களாக செயல் படாமல் உள்ளது.
சிபிஎம் போராட்டம்
எனவே, இதனைக் கண்டித்தும், புதிய பேருந்து நிலையத்தை முறை யாக செயல்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி பேருந்து நிலையம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
கோரிக்கை
அதில்,மதுரை-நெல்லை, நாகர்கோவில் வரை செல்லும் பைபாஸ்-ரைடர் பேருந்துகள், தொலை தூரப் பேருந்துகள் மற் றும் ஆம்னிப் பேருந்துகள் அனைத் தும் புதிய பேருந்து நிலையத்திற் குள் வந்து செல்ல வேண்டும். விருதுநகரில் இருந்து புறப் படும் தொலைதூரப் பேருந்து களான இராமேஸ்வரம், திருச்செந் தூர் உள்ளிட்ட அனைத்துப் பேருந்து களும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். மேலும், விருதுநகர் பேருந்து நிலையத்தில் முன்பு செயல்பட்டு வந்த தொலைதூரப் பேருந்து களுக்கான முன் பதிவு மையத்தை தொடங்கிட வேண்டும் எனவும் அர சுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டம்
இதையடுத்து, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகி யோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடத்தப்பட்டது. அதில், விருதுநகர் புதிய பேருந்து நிலை யத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும், அதன்பிறகு பேருந்து நிலை யத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு, விருதுநகர் நக ராட்சி சார்பில் ரூ.9.50 லட்சத்திற்கு அடிப்படை வசதிகளுக்கான பணி களுக்கு ஏலம் விடப்பட்டு பல மாதங்கள் கடந்துவிட்டன. இருந்தபோதும், தற்போது வரை புதிய பேருந்து நிலை யத்தை செயல்படுத்த அரசுத் தரப் பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமான அளவு இல்லையென பொது மக்கள் குற்றம் சாட்டுகின் றனர்.
மீண்டும் போராட்டம்
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருதுநகர் நகர்க்குழு மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்தக் கோரி போராட்டம் நடத்தினால், அனைத்து தரப்பு மக்களும் அதில் கலந்து கொள்வதாக தெரிவித்துள் ளனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடி யாக விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தை செயல் படுத்துவேதாடு, அனைத்து அரசுப் பேருந்துகளும் தலைநகருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.