இலவச கூடைப்பந்தாட்ட கோடைகால பயிற்சி முகாம் துவக்கம்
அறந்தாங்கி, மே 22- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஃபைட்டிங் ஸ்டார்ஸ் கூடை பந்தாட்டக் கழககத்தினரால் இலவச கூடைபந்தாட்ட கோடை கால பயிற்சி முகாம் துவங்கப்பட்டது. முதல் நாள் பயிற்சி முகாம் முடிவில் பங்குபெற்ற இளம் சிறார்களுக்கு முட்டை, பால் வழங்கப்பட்டது. இந்தக் கோடை கால இலவச கூடை பந்தாட்டப் பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள். தலைவர் சக்தி குமரன், செயலாளர் பாண்டித்துரை, துணை தலைவர் மகாதேவன், ஐயப்பன், விமல் ராஜ், துணைச் செயலாளர் கலைஞர் விஷ்வா மற்றும் பைட்டிங் ஸ்டார்ஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவாக ஒருங்கிணைப்பாளர் பா. விஜய் ஆனந்த். நன்றி கூறினார்.