ராணிப்பேட்டை, அக்.13- தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் பவர் கிரிட் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்கக் கோரி விவசாய சங்கத் தலைவர்கள் தொடர் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்க மாநில துணைச் செயலாளர்கள் ஞ.பெருமாள், கே.நேரு, இரா.சரவ ணன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எஸ்.பலராமன் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, பொருளாளர் ஊ.ராதா கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.செல்வம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.ரகுபதி, மாவட்டத் தலைவர் டி.சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெ.சண்முகம் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், “ விவசாயிகள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முத்த ரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்ய தவறினால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்து வோம்” என்று மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாமரைப்பாக்கம் தொடங்கி திருவலம் வரை 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உயர்மின் கோபுரங்கள் பாதிக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயர்ந்தபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தினர்.