tamilnadu

ஹெலிகாப்டர் பேர ஊழலுக்கும் சோனியாவுக்கும் தொடர்பு இல்லை

புதுதில்லி,டிச.24- 2010 ஆம் ஆண்டில் இத்தாலியின்  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து  விவிஐபிகளுக்காக 12 சொகுசு ஹெலிகாப்டர் கள் வாங்க ரூ. 3,600 கோடிக்கு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில் சுமார் ரூ. 400 கோடி இந்தியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் உறவினர் விமானப்படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் மீது  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக இடைத்தரகராக செயல்பட்ட சுஷேன் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் குறிப்பு களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த அமலாக்கத் துறையினர், ஆவணங்க ளில் குறிப்பிட்டுள்ள எஸ்ஜி  என்பதற்கும் சோனியா காந்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எஸ்ஜி (SG) என்பது சுஷேன் குப்தாவை குறிப்ப தாகவே உள்ளது என்பது அவரது பல்வேறு வங்கிக்கணக்குகளில் நடந்த பரிவர்த்த னைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

;