சென்னை, செப். 5 - தமிழக அரசு அறிவித்த 3 விழுக் காடு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரி திங்க ளன்று (செப்.5) தமிழகம் முழுவ தும் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர், ஆசிரியர், மாநில பொதுத்துறைகளில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு ஆக.1 முதல் 3 விழுக்காடு அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும் என்று ஆக.15 அன்று முதலமைச்சர் அறிவித்தார். இதன்படி அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்க ளுக்கு மட்டும் வழங்கப்பட வில்லை. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு அறைகூவல் விடுத்தது. இதையொட்டி தமிழ்நாடு முழுவ தும் அனைத்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒரு வரான சுப்பிரமணியன் குறிப்பிடு கையில், “அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கும் போது, மின்வாரிய தொழிலாளர்க ளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி அரசு செயல்படுகிறது. பணியாளர்கள், பொருட்கள் பற்றாக்குறை இருந்தாலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர்கள் பணி யாற்றுகின்றனர். இப்பிரச்சனை யில் முதலமைச்சர் தலையிட்டு 2 நாட்களில் தீர்வு காணாவிடில் கடுமையான போராட்டங்கள் நடைபெறும்” என்றார். இந்தப் போராட்டத்தில் மின்ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெ ய்சங்கர், பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டு கூட்டமைப்பு நிர்வாகி கள் பேசினர்.