சென்னை,டிச.21- தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உதவி தேர்தல் அதிகாரிகள் நிய மிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. மேலும் ஒவ்வொரு மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, பொது வார்டு, எஸ்.சி., எஸ்.டி., வார்டுகளும் பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 ஆம் தேதி வார்டு வாரியாக புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது பெயர் எந்த வார்டு, எந்த வாக்குச் சாவடியில் உள்ளது என்பதை இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சில மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டன. அப்படி தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்படவில்லை. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளுக்கு மட்டுமே வாக்காளர் பட்டியல் வெளியானது. தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளா ட்சிகளில் வார்டு பிரிக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் தாம்பரம் மாநக ராட்சிக்கு வரையறுக்கப்பட்டு உள்ள 70 வார்டுகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
அதன்பிறகு அங்கு வாக்காளர் பட்டியல் வெளி யாகும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதி தாக உருவாக்கப்பட்ட மாங்காடு, நந்திவரம்- கூடுவாஞ்சேரி, குன்றத்தூர், பொன்னேரி, திருநின்ற வூர் ஆகிய நகராட்சிகளுக்கான எல்லை நிர்ணயம் நடந்து வருகிறது. அங்கும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து ள்ளது.
அடுத்த மாதம் (ஜனவரி) தேர்தல் அட்டவணை வெளியிடப்பட உள்ளது. பொங்கலுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அட்டவணை வெளி யாக உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு வரையறை செய்யப்பட்ட பகுதிகளுக்கு முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவது என்றும், தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2-வது கட்டமாக தேர்தல் நடத்துவது என்றும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரி கிறது. அநேகமாக பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.