சென்னை,பிப்.2- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களாக ஊரக பகுதி அதிகாரிகளை நியமிக்க கோரிய அதிமுகவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 80 ஆயிரம் காவலர்கள், ஒரு லட்சத்து 30 ஆயிரம் அரசுப் பணியாளர்களை தேர்தல் அலுவலர்களாக நியமிப்பதாகவும் தெரிவித்திருந்தது. தேர்தல் நடைபெறும் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்க ளுக்கு பதிலாக, தேர்தல் முடிந்து விட்ட ஊரக பகுதி அதிகாரி களை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர், தனது மனுவில், ‘தேர்தலில் பெரும்பாலும் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடுகளை தவிர்க்கவும், '
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தவும் ஊரக பகுதிகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களை தேர்தல் அலுவலர்க ளாக நியமிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதுதொடர்பாக அளித்த விண்ணப்ப மனுவை பரிசீலிக்கும்படி, மாநில தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நிர்வகிக்க முடியாது. இதுபோன்ற வழக்குகள் கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் அதிருப்தி கருத்து தெரிவித்தனர். தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தலை ஆணை யத்திற்கு உத்தரவிட முடியாது எனவும், மனுவை அபராதத்து டன் தள்ளுபடி செய்யப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரித்த னர். இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக பாபு முருகவேல் தரப்பில் கூறியதை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.