tamilnadu

img

மாவட்ட தலைநகரங்களில் மாநில வங்கி தொடங்காதே!

சென்னை, செப். 20 - தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தனது கிளைகளை தொடங்க உள்ளதை தடுக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சரிடம் ஊழியர் சம்மேளனம் வலி யுறுத்தி உள்ளது. கேரள மாநிலத்தை போன்று தமிழ்நாடு மாநில தலைமை கூட்டு றவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை ஒருங்கி ணைத்து தமிழ்நாடு வங்கி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேள னம் (ஃபெபி) வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, துறையின் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதனிடையே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தனது கிளைகளை மாவட்ட தலைநகரங்க ளில் தொடங்க நடவடிக்கை எடுத்து வரு கிறது. இந்நிலையில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை, திங்க ளன்று (செப்.19) திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் இ.சர்வேசன் சந்தித்து, மாநில வங்கி, மாவட்ட தலை நகரங்களில் கிளைகளை திறக்க கூடாது. அவ்வாறு கிளைகளை திறப் பது, மத்திய, நகர கூட்டுறவு வங்கி களை சீரழிக்கும் நடவடிக்கையாக அமையும். கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மேம்படுத் துவதற்கும் வழிகாட்ட வேண்டிய மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அதற்கு மாறாக கூட்டுறவு வங்கிகளை பலவீன ப்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரினார்.

தமிழ்நாடு வங்கியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய சர்வேசன், அக்.8-9 தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள சங்கத்தின் 8வது மாநில மாநாட்டில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட அமைச் சர் ஐ.பெரியசாமி, இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கிளைகள் திறப்பதை தடுத்து நிறுத்துவதாக உறுதி அளித்தார். மாநாட்டில் பங்கேற்கவும் ஒப்புக் கொண்டார். இந்நிகழ்வின் போது சம்மே ளன நிர்வாகிகள் ராஜகேசி, கோவிந்த ராஜ், பெரியார் பாண்டியன், ராஜ மாணிக்கம், மதன், பாலமுருகன், கடல் கண்ணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;