tamilnadu

img

அம்பானி அதானி பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அம்பானி அதானி பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கு.கணேசன் தலைமையில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  லெனின், ஸ்டாலின், சசிகலா மற்றும் பகுதிச் செயலாளர்கள் இளங்கோ, அழகர்சாமி; விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ப.ரவிக்குமார், சா.ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;