tamilnadu

ஜன.5 முதல் ஆட்சியரகங்கள் முன்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

சென்னை,டிச.14-  கனமழையால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகள், விவசாயத்தொழிலா ளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜனவரி 5 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு  விவசாயிகள்,  விவசாயத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர்  வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்க ளில் பெய்த தொடர் மழையினால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயப் பயிர்கள் அழிந்து போயின.

வீடு களில் தண்ணீர் புகுந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. மாதக்கணக்கில் பெய்த மழை யினால் விவசாயத் தொழிலாளர்கள் வேலை  கிடைக்காமல் வருமானம் இழந்து பெரும் துயரத்திற்கு உள்ளாகினர். கோமாரி நோய்ப் பாதிப்புக்குள்ளாகி பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் மாண்டு போயின. அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. குறிப்பாக, நெல், மரவள்ளி, மக்காச்சோ ளம், மலர் சாகுபடி, கேழ்வரகு, பருத்தி, வாழை,  உளுந்து, பயிறு, வெங்காயம், மிளகாய், சூரிய காந்தி, கிழங்கு வகைகள்  ஆகியவை முற்றிலும் அழிந்து விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இத்தகைய நிலை யில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டு முற்றிலும் அழிந்து போன பயிர்களுக்கு எவ்வித நிவாரணமும் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

என்பதை சுட்டிக்காட்டுகிறோம். பல மாவட்டங்களில் முறையான கணக்கெடுக்கும் பணி கூட மேற் கொள்ளப்படவில்லை. எனவே, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மழையால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருக்கும் போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் கள் சங்கம் நடத்துகிறது.  கோரிக்கைகள் முற்றிலும் அழிந்து போன நெற்பயிர்க ளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவுகளை ஈடுசெய்யும் வகையில் இழப்பீடு வழங்க வேண்டும். கோமாரி நோயினால் இறந்து போன மாடு,  ஆடு, கோழி ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்க  வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும்.   பல்லாயிரக்கணக் கான வீடுகளில் தண்ணீர் தேங்கி பாதிக்கப் பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மழையினால் வேலையின்றி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாய தொழிலாளர் குடும்பங்க ளுக்கும் வேலையில்லா கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். வாழத் தகுதியற்ற தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிதாக தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். மழை நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரியுள்ள நிதியை இந்திய ஒன்றிய அரசு தாமதமின்றி வழங்க வேண்டும். 2020-21 இல் பிரிமியம் செலுத்தி விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைத்து நீர்நிலைகளையும் முழு மையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும்.  மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயி லாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணா மலை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தென் காசி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்க ளில் தொடர் காத்திருக்கும் போராட்டம் நடை பெறும். விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலா ளர்களின் நலன்களை முன்னிறுத்தி நடைபெற வுள்ள இப்போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் . இந்த நியாயமான கோரிக் கைகளை ஏற்று செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;