tamilnadu

img

போடி பகுதியில் காளவாசல் தொழிலை பாதுகாக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கே.பாலபாரதி - ஏ.லாசர் பங்கேற்பு

தேனி, ஜூலை 11- போடி ஒன்றியத்தில் செங்கல் காளவாசல் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், நாட்டு செங்கல் காள வாசல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. போடி ஒன்றியம், மேலச்சொக்க நாதபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள நாட்டு செங்கல் காளவாசல் களுக்கு குவாரிகளில் பணம் கொடுத்து வாங்கும் மண்ணுக்கு கனிம வளத்துறை அதிகாரிகளால் விதிக்கப்பட்ட தண்டத் தொகையை ரத்து செய்ய வேண்டும். குடிசை தொழிலான நாட்டு செங்கல்  காள வாசலுக்கு உரிமம்பெற நிர்ப்பந்திக்கக்கூடாது. இலவசமாக மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேனி ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஜூலை 10 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் தலைமை வகித்தார். செங்கல் காளவாசல் நிர்வாகிகள் ஆர்.வாசு, எம்.ஸ்டாலின், எஸ்.மணிகண்டபிரபு, என்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ஏ.லாசர் துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி நிறைவு செய்து பேசினார்.  விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.வேலவன், மாவட்ட செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, மாவட்ட துணைத் தலைவர் கே.தயாளன், விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ். கே.பாண்டியன், மாவட்டச் செய லாளர் டி.கண்ணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி. முனீஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போடி தாலுகா செய லாளர் எஸ்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், விவசாயத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தங்கபாண்டி, ஆர்.காமராஜ் மற்றும்  300 பெண்கள் உள்பட  500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

திருட்டுப் பட்டம் சுமத்துவதை ஏற்கமுடியாது: ஏ.லாசர் 

நாட்டு செங்கல் காளவாசல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் பெரும்பாலும் குலத்தொழிலாக  மண்பாண்டம் உற்பத்தி செய்த வர்கள்.  அலுமினியம், எவர் சில்வர்  பாத்திரங்கள் வந்த பின்பு மண்பாண்ட தொழில் நசிவடைந்து காட்சி பொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில் அவர்கள் கட்டுமான தொழிலுக்கு தள்ளப்பட்டனர். அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களிடம் மண்ணை விலைக்கு வாங்கி சேமித்து வைத்து  செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதல் மண் சேமித்து வைத்து, 30, 40 தொழி லாளர்களுக்கு தினசரி வேலை கொடுத்து வந்தார்கள். அப்படி சேமி க்கப்பட்ட மண்ணை திருட்டு மண் எனக் கூறி அதிகாரிகள் அபராதம்  விதித்துள்ளனர். உழைப்பாளி மக்கள் மீது திருட்டு பட்டம் சுமத்த அனுமதிக்க மாட்டோம். மேலும் சிறு தொழில் செய்து வரும் இவர்களை உரிமம் பெறவேண்டும் என நிர்ப்பந்திப்பது சரியல்ல. இது தொழிற்சாலை சட்டத்திலோ, கம்பெனி சட்டத்திலோ வரவில்லை.  அதிகாரிகளின் இந்த செயலால் சுமார் 35 குவாரிகளில் 800 முதல் 1000 பேர் வரை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

அரசு  மண் வழங்க வேண்டும்: கே.பாலபாரதி

குலத்தொழிலை அடிப்படை யாக கொண்டு காளவாசல் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரம் குடும்பத்தினர் வாழ்வாதாரம் கருதி  தமிழ்நாடு அரசு இலவசமாக மண் கொடுக்க வேண்டும். குடிசை  தொழிலாக செய்து வருபவர் களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பது பயனளிக்காது. குடிசை தொழிலுக்கு அடிப்படை விதி தெரியாமல் லைசென்ஸ் கேட்டு அச்சுறுத்துவது கண்டனத்திற்குரியது. உரிமம் பெற்ற குவாரிகளிடம் விலைக்கு வாங்கிய மண்ணுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம், நாட்டு செங்கல் காள வாசல் உற்பத்தியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். காள வாசலுக்கு தேவையான மண்ணை அரசு நேரடியாக வழங்க வேண்டும் என்றார்.

ஆட்சியருடன் சந்திப்பு

மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனாவை, கே.பாலபாரதி, ஏ.லாசர் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர், கனிம வளத்துறையினர் விதித்துள்ள அபராதத் தொகை யை மறுபரிசீலனை செய்ய உறுதியளித்தார்.
 

;